Thursday, May 21, 2009

இருப்புக்கு மீள்தல் - 01


மரணம்... நான் மயக்கமுற்றுக் கிடந்தவேளையிலும் என் அருகிலேயே விழித்தபடி பார்த்திருந்திருக்கிறது என்பதனைப் பின்னர்தான் அறிந்தேன். இரத்த நாளங்களெங்கிலும் அப்பொழுதுதான் அருந்திய உணவிற்குள் ஒளிந்திருந்த விஷம் வேகமாகப் பரவியபடி இருக்கையில் அருகில் யாருமற்ற சூழலில் தனித்து, மயக்கமுற்றுக் கிடப்பதென்பது கூற்றுவனைத் தோளிலமர்த்திப் பார்த்திருக்கச் செய்வதன்றி வேறென்ன? நான் அப்படித்தான் கிடந்திருந்திருக்கிறேன். புறச்சூழல் நிசப்தத்தை, செவிகளில் மெதுமெதுவாக ஏற்ற, மயங்கிச் சரிந்திருக்கிறேன். விழி சொருகும் இறுதிக் கணத்தில் என்ன நினைத்தேனென இன்னும் ஞாபகத்திலில்லை.

இன்னும் உணவருந்திய பகல்பொழுது நினைவிலிருக்கிறது. பிறகுதான் மயங்கியிருக்கிறேன். விடுமுறை நாளில் அலுவலக வேலைக்கென வந்து ஏறத்தாழ நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக உள்ளே தனித்த நிலையில் விழுந்துகிடந்தேனென என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற சக அலுவலகர் பின்னர் சொன்னார். அங்கு உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பொழுது அவரிடம் சில கையெழுத்துக்கள் வாங்கிக்கொண்டு, வெளியே காத்திருக்கச் சொன்னார்களாம். காத்திருந்த பொழுதில் அவரிடமிருந்து ஆரம்பித்திருக்கிறது எனக்கான முதல் பிரார்த்தனை.

ஊர் நண்பர்கள், சக ஊழியர்கள் பதறித்துடித்து ஓடிவந்து காத்திருந்தும், மயங்கிப் பின் முப்பத்தாறு மணித்தியாலங்களுக்கு முன்பதாக நான் கண்விழிக்கவில்லை. இருபத்துநான்கு மணித்தியாலங்கள் தாண்டியும் விழிப்பு வராமல் போகவே வைத்தியர்கள் எனது அபாயநிலையை வீட்டுக்கு அறிவிக்கும்படி சொல்லிவிட்டார்களாம். யாரிடமும் எனது வீட்டுத் தொலைபேசி எண் இல்லை. என்னோடு சேர்ந்து வீழ்ந்து உடைந்து சிதறிப் போன கைத்தொலைபேசியும் அலுவலகத்தில் எனதிருக்கையருகில் அப்படியே கிடக்கும். அதுபோலவே அங்கங்கே உறைந்து போய் எல்லோரும் எனது விழிகள் திறக்கக் காத்துக் கிடந்தார்கள். சக அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஈரானியச் சகோதரி, அவரதும் எனதும் நண்பர்களுக்கெல்லாம் நான் நோயுற்ற செய்தியை அனுப்பி எனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார் எனப் பின்னர் அறிந்தேன்.

ஒன்றரை நாட்கள் கடத்தி நான் விழித்துப் பார்த்தபொழுது வேறொரு உலகத்தில் இருக்கிறேனோ என்ற நினைவினைத் தோற்றுவிக்கும்படி என்னைச் சுற்றிலும் ஏராளமான மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாடிக் கிடந்த என்னுடலில் இணைக்கப்பட்டிருந்தன. அணிந்திருந்த ஆடை மாற்றப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஓயாது சேர்ந்தடித்து நொறுக்கியதைப் போன்றதொரு சோர்வையும் வலியையும் என்னில் உணர்ந்தேன். என் நிலையைக் கண்காணிக்கவென எப்பொழுதும் கூடவே இருக்கும்படி நியமிக்கப்பட்ட ஒரு மருத்துவத்தாதி என்னிலேற்பட்ட சிறு சலனத்துக்கு முகம் முழுதும் மகிழ்வோடு அருகினில் ஓடி வந்து கன்னத்தில் இலேசாகத் தட்டி முழுதும் விழிக்கும்படி செய்தாள். பகலா, இரவா எனத் தெரியாதபடி விழித்தேன். எங்கிருக்கிறேன் எனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு என்ன ஆனதெனப் புரியாமல் விழித்தேன். அவ்வளவு நேரமும் காத்திருந்த கூற்றுவன் என் உயிர் வாங்கிப் போகும் உத்தேசமற்று நகர்ந்துபோனதை அறியாது விழித்தேன். ஏன் விழித்தேன்? ஏன் இவ்வுலகை மீளவும் பார்த்தேன் ?

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.

நன்றி - விகடன்.

இருப்புக்கு மீள்தல் - 02 இங்கே...

42 comments:

Anonymous said...

Welcome back Rishan!!!
God is great.

- Kiri

Natchathraa said...

Engalai vittu eppadi unnal poga mudiyum rishi...

engalukaga nee meendu vandhai maru jenmam eduthu... ini unaku valkaiyil vetrigal nichayam...

pudhu thembudan melum pala pala sathanai puriyavey meendu vanthai...

vetri pathaiyil munera enathu manamarntha valthukkal thambiii...

Natchathraa said...

Wish you all success in your life Rish.....

கானா பிரபா said...

ரிஷான்

மறைவாக வந்து கூகுள் சாட்டில் வந்து கதை பேசிய தருணங்கள் இல்லாத வெறுமையில் இருந்தேன், நீங்கள் வேலைப்பழுவில் இருப்பீர்கள் என்ற நினைப்பில். ஆனால் அபி அப்பா, அப்துல்லா பதிவுகளைப் பார்த்ததும் உண்மையிலேயே துடித்துப் போனேன். பழைய ரிஷான் மீண்டும் வரவேண்டும் என்று பிரார்த்தித்தேன், இன்று உங்கள் பதிவு தான் என்னை நிறைவாக்குகிறது,

நீண்ட காலம் சுகதேகியாக இருப்பீர்கள் இனி.

பூங்குழலி said...

நீங்கள் மீண்டு விட்டீர்கள் என்ற நிம்மதியினூடே வாசிக்கும் போதும் கூட இந்த கட்டுரை மனதில் வலி ஏற்படுத்துகிறது ரிஷான் ."தனியாய் தின்று செரித்து "என்று நீங்கள் ஒரு கட்டுரையில் எழுதியது பல பொழுதுகளில் என் மனதை கீரியதுண்டு .அதை எழுதிய சில நாட்களில் இது நிகழ்ந்தது வேதனை .
இறைவன் உங்களுக்கு தொடர்ந்து அருள் புரிவார் .

ரமேஷ் வைத்யா said...

வருக ரிஷான், வருக. அடுத்தடுத்த பாகங்களைப் படிக்க ஆவலாயிருக்கிறேன். உங்களுக்கு என் அன்பு.

Ponchandar said...

மீண்டு வந்து உங்கள் எழுத்துக்களால் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் ! ! இறைவன் என்றும் உங்கள் துணையிருப்பான்..

கோபிநாத் said...

மீண்டும் வருக நண்பா!

பண்புடனிலும், ஷைலா அக்கா பதிவும்,அபி அப்பா பதிவும் படிச்சிவிட்டு அதிர்ச்சி அடைந்தேன். மீண்டும் நலமுடன் வந்து பதிவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடவுளுக்கு நன்றி.

தொடருங்கள்...

mynah said...

ரிஷான், கடவுளுக்கு நன்றி...

Suresh said...

மீண்டு வந்த என் நண்பனுக்கு வாழ்த்துகள்... ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு, நாங்களும் உங்களோடு இருக்கிறோம்

அபி அப்பா said...

கமான் கமான் மை பாய்!

மங்களூர் சிவா said...

இறைவன் உங்களுக்கு தொடர்ந்து அருள் புரிவார் .

குசும்பன் said...

ஏன் விழித்தேன்? ஏன் இவ்வுலகை மீளவும் பார்த்தேன் ? //

ஏன் ஏன் ஏன்?

எங்களுக்காக:) அதை தவிர வேறு என்ன?

ஜோசப் பால்ராஜ் said...

அன்று அபி அப்பா, அப்துல்லாண்ணா போன்றோரது பதிவுகள் படித்து சோகத்தில் அழுதேன்.
இன்று எமனை எட்டி உதைத்து மீண்டதை நீங்கள் எழுதியதை படித்து ஆனந்தத்தில் அழுகிறேன்.

நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

சுரேகா.. said...

வணக்கம் தலைவா!
அடிச்சு ஆடுங்க!
எமனை உட்பட!

நல்லா இருப்பீங்க! கவலையே இல்லை!

Sanjai Gandhi said...

வாடா ரிச்சு, உன்னை திரும்பப் பார்ப்பதில் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி கவனமாய் இரு சகோதரா.

MSK / Saravana said...

அவ்ளோ சுலவா எங்கள விட்டு "எஸ்" ஆயிட முடியுமா என்ன??

Take Care Rishaan.. :)

இளைய அப்துல்லாஹ் said...

கேள்விப்பட்டதில் இருந்து மனது மிகவும் அந்தரமாக இருக்கிறது எனக்கு

இளைய அப்துல்லாஹ்

நாமக்கல் சிபி said...

ரிஷான்,

இப்போது நலமா இருக்கீங்கதானே!

மிக்க மகிழ்ச்சி!

geevanathy said...

/// மரணம்... நான் மயக்கமுற்றுக் கிடந்தவேளையிலும் என் அருகிலேயே விழித்தபடி பார்த்திருந்திருக்கிறது என்பதனைப் பின்னர்தான் அறிந்தேன். //

இறையருள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல

இறைவன் உங்களுக்கு தொடர்ந்து அருள் புரிவார்

எம்.எம்.அப்துல்லா said...

செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் காளை..ஹா..ஹா..ஹா..

இப்ப நக்கலடிக்கிறேன்...அன்று மனம் நொந்து வேலைக்கு லீவு போட்டு வீட்டுக்கு வந்ததை நினைத்தால், இறைவா அனைவரையும் நன்றாக வை.

ராமலக்ஷ்மி said...

கடவுளுக்கு நன்றி!

அனுபவங்களைப் பகிர்ந்திடுங்கள். ஆறுதல் பெறும் மனது.

Unknown said...

மன்னிக்கவும் , ரிஷான் தற்போதுதான் நான் அறிந்தேன்... நலம் வாழ என்னாலும் வாழ்த்துக்கள்....கடவுள் துணை இருப்பார்..

Unknown said...

மன்னிக்கவும் , ரிஷான் தற்போதுதான் நான் அறிந்தேன்... நலம் வாழ என்னாலும் வாழ்த்துக்கள்....கடவுள் துணை இருப்பார்..

வெயிலான் said...

எத்தனை விசாரிப்புகள், கவலைகள், செய்திகள், பதிவுகள், பிரார்த்தனைகள்.

அனைத்தும் உங்களை மீட்டெடுத்தது.

Sakthy said...

ரிஷான் ..இத்தனை பேரின் அன்பும் ,பிரார்த்தனைகளும் இருக்கும் போது கவலை ஏன் தோழா ?
என்றும் நலமுடன் வாழ வேண்டும் ...

இனியாவது உடம்பை , சாப்பாட்டை கவனியுங்கள் ரிஷான்

ஃபஹீமாஜஹான் said...

"செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் காளை..ஹா..ஹா..ஹா..

இப்ப நக்கலடிக்கிறேன்...அன்று மனம் நொந்து வேலைக்கு லீவு போட்டு வீட்டுக்கு வந்ததை நினைத்தால், இறைவா அனைவரையும் நன்றாக வை."

எம்.எம்.அப்துல்லாஹ்,
ரிஷான் இப்போது தான் கதையைச் சொல்லவே தொடங்கி இருக்கிறார். போகப் போக மயக்கம் போட்டு விழப்போறீங்க...:(

May 22, 2009 2:34 PM

ஃபஹீமாஜஹான் said...

"செத்துப்போய் எமனைப் பார்த்து சிரிச்சவன்டா இந்தக் காளை..ஹா..ஹா..ஹா..

இப்ப நக்கலடிக்கிறேன்...அன்று மனம் நொந்து வேலைக்கு லீவு போட்டு வீட்டுக்கு வந்ததை நினைத்தால், இறைவா அனைவரையும் நன்றாக வை."

எம்.எம்.அப்துல்லாஹ்,
ரிஷான் இப்போது தான் கதையைச் சொல்லவே தொடங்கி இருக்கிறார். போகப் போக மயக்கம் போட்டு விழப்போறீங்க...:(

May 22, 2009 2:34 PM

Unknown said...

”மரணம் என்னிடம் தோற்ற நாட்கள்” என்று சொல்லுங்கள் ரிஷான்.

இனியெல்லம் மரணம் உங்களைப்பார்த்து பயந்து நடுங்கிச் சாகும்!

வாழ்க பல்லாண்டு

அன்புடன் புகாரி

Tech Shankar said...

மீண்டு வந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி.

உங்கள் எழுத்தில் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆழம் அதிகரித்திருக்கிறது.

மனம் தளராதீர்கள் dude.

என்றும் உங்கள் dude
த.நெ.

பரிசல்காரன் said...

ரிஷான்..

இனி எல்லா நலமும் வளமும் உங்களைச் சூழட்டும்.

KARTHIK said...

நீங்க மறுபடியும் உடல் நலத்தோட எழுதவந்தது ரொம்ப சந்தோசம்.
கலக்குங்க தல

M.Rishan Shareef said...

என்னை அன்பாகவும், தங்கள் மனப் பூர்வமான ஆசிர்வாதங்களோடும் வரவேற்கும் எனது அன்புக்குரிய நண்பர்கள்

* கிரி

* நட்சத்திரா

* கானா பிரபா

* பூங்குழலி

* ரமேஷ் வைத்யா

* பொன்சந்தர்

* கோபிநாத்

* மைனா

* சுரேஷ்

* அபி அப்பா

* மங்களூர் சிவா

* குசும்பன்

* ஜோசப் பால்ராஜ்

* சுரேகா

* சஞ்சய் காந்தி

* சரவணகுமார் MSK

* இளைய அப்துல்லாஹ்

* நாமக்கல் சிபி

* த.ஜீவராஜ்

* எம்.எம்.அப்துல்லாஹ்

* ராமலக்ஷ்மி

* பேரரசன்

* வெயிலான்

* சக்தி

* ஃபஹீமா ஜஹான்

* அன்புடன் புகாரி

* தமிழ்நெஞ்சம்

* பரிசல்காரன்

* கார்த்திக்

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்பான உங்கள் அனைவரையும் ஒரேயடியாகக் கலக்கமடைய வைத்துவிட்டேனே என்ற மனக்கவலை தொடர்ந்துமிருக்கிறது. அனைவரையும் நேரில் சந்திக்கும்பொழுதுதான் இக்கவலை முழுமையாகத் தீரக் கூடும்.
அந் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இருப்புக்கு மீள்தல் - 02 இங்கே http://mrishansharif.blogspot.com/2009/05/02.html

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

அமரன் said...

நமனின் மடியில் நாம் மயங்கிக் கிடந்த நிமிடங்களில் நாம் பார்க்க முடியாத காலத்துளிகள். கற்பனைக்கு எட்டாத அந்தக் காலக்கட்டத்தை, அந்த நேரத்துப் பதைப்பையும் இதயத் துடிப்பையும் பக்கத்திலிருந்து பார்த்தவர்கள் காலம் கடந்தும் வற்றாத உணர்வுடன் விபரிக்க, கண்களை மூடிக் கணங்களை புருவ மத்தியில் நிறுத்தி வார்த்தைகள் புதைப்பது எந்தளவு கடினமானது. புதையலை எடுக்க வாசகனைத் தூண்டுவது மலையைச் சுமத்துக்கு ஒப்பானது. எல்லாவற்றையு மிக இலாவகமாக அலாதியான ஈடுபாட்டுடன் செய்திருக்கிறீர்கள். ஆர்மார்த்தம் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. உங்கள் ஆர்மார்த்த பார்வை நெஞ்சை அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கிறது.

சூழலை தீட்டுவதிலாகட்டும் தனை ஊட்டுவதிலாக்கட்டும் பலதை தொட்டுச் சென்றாலும் அவை என்னைத் தொடுவதை தடுக்க முடியவில்லை.

M.Rishan Shareef said...

இருப்புக்கு மீள்தல் - 03 இங்கே

http://mrishansharif.blogspot.com/2009/06/03.html

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,
கவித்துவமான வரிகளில் உங்கள் கருத்தினைத் தந்து வியக்கச் செய்கிறீர்கள்.
எனது அன்பான நன்றிகள் நண்பரே !

M.Rishan Shareef said...

இருப்புக்கு மீள்தல் - 04

http://mrishansharif.blogspot.com/2009/06/04.html

Unknown said...

Welcome back.... Thank God.

Hope nw u r ok.. take care. & take a lot of rest

M.Rishan Shareef said...

இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.html

M.Rishan Shareef said...

அன்பின் லலிதா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.html