பின்னர் என்ன? அம்மாவின், சகோதர,சகோதரிகளின், நண்பர்களின் கூட்டுப் பிரார்த்தனையும் தொடர் சிகிச்சையும் என்னை எழுந்து நடமாடச் செய்தது. திரும்பவும் ஆறுமாதத்துக்கு அம்மா என்னை மீளப்பிறந்த குழந்தையாய்த் தாங்கினார். எனக்காக, வீட்டிலுள்ள அனைவரும் கூடப் பத்தியச் சாப்பாடுதான். உப்பும், மசாலாக்களுமற்று வெறுமனே அவித்த காய்கறிகளும், சோறும் உணவுக்கெனவும் இனிப்பு சேர்க்கப்பட்ட இளநீர் தாகமெடுக்கையில் அருந்தவெனவும் தரப்பட்டுக்கொண்டே இருந்தன. உறக்கம், அது தவிர்த்து அம்மாவின் கண்காணிப்பில் முற்றத்தில் சிறு உலாத்தல், அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு மாலை வகுப்பெடுத்தல் இப்படியாகப் பொழுதுகள் நகர்ந்துகொண்டே இருந்தன. அந்தூரியமும் ரோசாவும் வளர்த்தேன். அலுப்பூட்டினால் பார்த்து ரசியெனப் புது மீன் தொட்டியொன்றும் வர்ணமீன்களும் வரவேற்பறையை அலங்கரித்தன.
வாசிக்கவெனப் புத்தகங்களை சகோதரர்கள் வாங்கிவந்துகொண்டே இருந்தார்கள். நண்பர்களும் தொடர்ச்சியாகத் தேடி வந்துகொண்டே இருந்தனர். அப்பொழுதெல்லாம் நிறைய வாசிக்கவும் எழுதவும் செய்தேன். மனம் சொன்னவற்றையெல்லாம் எந்தத் தயக்கங்களுமற்று, எந்த நிர்ப்பந்தங்களுமற்று எழுத்துக்களாக்கிக் காகிதங்களில் மேயவிட்டேன். எல்லாவற்றையும் காலத்தோடு தாண்டிவந்து பலவருடங்களாகிடினும் இன்னும் நினைவில் இருந்துகொண்டே இருக்கின்றன எல்லாமும்.
இப்பொழுதும் அம்மாவும், அன்பானவர்களும் பக்கத்திலிருந்தால் நன்றாக இருக்குமேயென நினைத்துக்கொண்டேன். கண்விழித்துப் பார்த்தேன். கைநரம்பினூடு மருந்து கலக்கப்பட்ட திரவத்தைச் செலுத்தியபடி தலைகீழாய்த் தொங்கவிடப்பட்டிருந்த போத்தலில் திரவமட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. தாதி புதிய போத்தலை மாற்றமுயற்சித்துக் கொண்டிருந்தாள். எனக்குத் தாகமாக இருந்தது. உள்நாக்கு வரையில் வரண்டுபோய்க் கிடந்தேன். புன்னகையோடு என் விழிகளை நேரே பார்த்தவளிடம் மிகச் சிரமப்பட்டுத் தண்ணீர் கேட்டேன்.
அவள் வைத்தியரிடம் கேட்டுவருவதாகச் சொல்லிவிட்டுப் போனாள். சில நிமிடங்கள் தன்பாட்டில் கரைந்தபடி இருந்தன. இரவா,பகலா என இன்னும் தெரியவில்லை. எனது தேசத்தின் வைத்தியசாலைகளில் வரும் வாடையைப் போன்றதொரு வாடை இங்கு இல்லை. எனினும் ஏதோ ஒரு நெடி என்னைச் சுற்றி ஒரு வலையைப் பரப்பி அலைந்துகொண்டே இருந்தது. தாதி, வைத்தியரை அழைத்து வந்தபொழுது மூக்கின் வழியும், இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் வழியும் குருதி மிகவும் உக்கிரமாகக் கசிந்துகொண்டிருந்தது. நான் திரும்பவும் மயங்கிப்போயிருந்தேன்.
(தொடரும்)
- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்
17 comments:
\\இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் வழியும் குருதி மிகவும் உக்கிரமாகக் கசிந்துகொண்டிருந்தது. நான் திரும்பவும் மயங்கிப்போயிருந்தேன்.\\
அய்யோ!! ;(
நிச்சயமாக மறுபிறப்பு தான் ரிஷான் இது
ரிஷான்,
நீங்கள் மீண்டு வந்ததை விவரித்திருந்தீர்கள். ஆனால் என்ன சாப்பிட்டீர்கள், எதனால் உணவு நஞ்சானது, என்ன நடந்தது போன்ற விவரங்களைத் தெரிவித்தீர்களானால், மற்றவர்களும் கவனமாக இருக்க உதவுமே!!
நன்றி,
ஹுஸைன்.
//நிச்சயமாக மறுபிறப்பு தான் ரிஷான் இது//
unmai thaan rishi...
ethanai vethanai patirupey...
hmm thank god...u r back again...
மூன்று பகுதிகளும் படித்தேன் ரிஷான்..கற்பனைச் சிறுகதை என்று படித்திருந்தாலே கண்ணில் கண்ணீர் வந்திருக்கும்....நிஜம் என்ற்று ஒரு கணம் உணர்ந்த போது சிலிர்த்துப் போனது
பாசமலர் சொல்லியிருப்பது போல் இவை யாவும் நிஜமென்கிற நிஜம் மிகுந்த வலியினைத் தருவதாக உள்ளது.
இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் வழியும் குருதி மிகவும் உக்கிரமாகக் கசிந்துகொண்டிருந்தது//
Aiyoo
இருப்புக்கு மீள்தல் - 04 இங்கே...
http://mrishansharif.blogspot.com/2009/06/04.html
இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...
http://mrishansharif.blogspot.com/2009/06/05.html
அன்பின் கோபிநாத்,
//\\இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் வழியும் குருதி மிகவும் உக்கிரமாகக் கசிந்துகொண்டிருந்தது. நான் திரும்பவும் மயங்கிப்போயிருந்தேன்.\\
//அய்யோ!! ;( //
எழுத்துக்கே இப்படியென்றால்?
நல்லவேளை நீங்கள் அருகிலில்லை. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் பூங்குழலி,
//நிச்சயமாக மறுபிறப்பு தான் ரிஷான் இது//
:)
இனி எல்லாம் சுகமே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ஹுசைன்,
//ரிஷான்,
நீங்கள் மீண்டு வந்ததை விவரித்திருந்தீர்கள். ஆனால் என்ன சாப்பிட்டீர்கள், எதனால் உணவு நஞ்சானது, என்ன நடந்தது போன்ற விவரங்களைத் தெரிவித்தீர்களானால், மற்றவர்களும் கவனமாக இருக்க உதவுமே!!
நன்றி,
ஹுஸைன்.//
மிகவும் சரி..அதுபற்றி விரிவாக விரைவில் எழுதுகிறேன் நண்பரே !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
அன்பின் நட்சத்திரா,
////நிச்சயமாக மறுபிறப்பு தான் ரிஷான் இது//
unmai thaan rishi...
ethanai vethanai patirupey...
hmm thank god...u r back again...//
ஆமாம்..இனி வலிகளற்ற பாதைகளே எதிர்கொள்ளட்டுமென நடக்கத் தொடங்கியிருக்கிறேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் பாசமலர்,
//மூன்று பகுதிகளும் படித்தேன் ரிஷான்..கற்பனைச் சிறுகதை என்று படித்திருந்தாலே கண்ணில் கண்ணீர் வந்திருக்கும்....நிஜம் என்ற்று ஒரு கணம் உணர்ந்த போது சிலிர்த்துப் போனது //
:)
எல்லாவற்றையும் உங்கள் அனைவரினதும் பிரார்த்தனைகளால் தாண்டி வந்தாயிற்று.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ராமலக்ஷ்மி,
//பாசமலர் சொல்லியிருப்பது போல் இவை யாவும் நிஜமென்கிற நிஜம் மிகுந்த வலியினைத் தருவதாக உள்ளது.//
சிலவேளை யோசித்துப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் இயற்கை,
//இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் வழியும் குருதி மிகவும் உக்கிரமாகக் கசிந்துகொண்டிருந்தது//
Aiyoo//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...
http://mrishansharif.blogspot.com/2009/06/05.html
Post a Comment