Friday, June 5, 2009

இருப்புக்கு மீள்தல் - 04


இம்முறை சற்று அதிக மணித்தியாலங்கள் மயக்கம். ஏறத்தாழ மூன்று நாட்கள். நண்பர்கள் வேலை நேரங்கள் தவிர்த்து ஓய்வு நேரங்களிலெல்லாம் வந்து பார்த்துக் கவலையோடு திரும்பிப்போனார்கள். அவர்களது உரையாடல்களெல்லாம் மிகவும் பதற்றத்துடன் என்னைப் பற்றியே இருந்திருக்கக் கூடும். அவர்களுடனான எனது இனிய நினைவுகள் மீட்டப்பட்டிருக்கக் கூடும். நான் மீண்டு வருவேனோ, மாட்டேனோ என்ற பரபரப்பு எல்லோரிலும் தொற்றியிருந்திருக்கும். திரும்பவும் மூன்று நாட்கள் கழிந்த பின் ஓர் நாள் மிகவும் தாகத்தோடு மீண்டும் விழித்தேன். அதே தாதி. அதே பரபரப்பு.

தாதி, திரும்பவும் போய் உடனே வைத்தியரோடு வந்தாள். அதே இளவைத்தியர். அதே குழந்தைப் புன்னகை. நான் திரும்பவும் தண்ணீர் கேட்டேன். குரல் ஒத்துழைக்கவில்லை. சைகை செய்தேன். என்னருகே குனிந்தார். ஒரு குழந்தையிடம் சொல்வதைப் போன்ற அன்பான குரலில் சொன்னார்.

' நீங்கள் தொடர்ச்சியாகப் பலநாட்கள் பட்டினியிலிருந்திருக்கிறீர்கள். உடல் மிகவும் பலவீனமுற்றிருந்திருக்கிறது. உங்கள் உணவில் மறைந்திருந்த விஷம் உங்கள் தொண்டைக்குழியினூடு இறங்கிச் சென்ற வழியெங்கிலும் புண்களைத் தோற்றுவித்தபடி நகர்ந்திருக்கிறது. அவற்றின் புண்கள் முழுதாகக் காயும்வரையில் உணவெதற்கும் பரிந்துரைக்க முடியாதவனாக இருக்கிறேன். மன்னியுங்கள். தண்ணீரையும் கூட இன்னும் சில மணித்தியாலங்கள் கழித்தே அருந்தத் தரலாம்.'

மிகவும் அன்பான குரல் அவரிடமிருந்து வழிந்தது. அன்பு, வழிய வழியத் தரப்படும் அன்பு. காதலிக்கக் கெஞ்சும் நாட்களில் மனிதர்களிடம் மிகைத்திருக்கும் அதே அன்பான, இழைவான குரல் அவரிடமிருந்து வெளிப்பட்டது. அவரது குடும்பம், சக ஊழியர்கள், நண்பர்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களென எண்ணிக்கொண்டேன். தாதியிடம் எதையோ எடுத்துவரச் சொல்லிக் கட்டளையிட்டார். அவள் நகர்ந்ததும் என்னருகில் குனிந்தார். ' எனது அன்புக்குரியவரே! அழகாக இருக்கிறீர்கள். எந்தக் குறைபாடுமற்றவராக இருக்கிறீர்கள். இளவயதினராக இருக்கிறீர்கள். உங்கள் குருதியெங்கிலும் நச்சு பரவியிருக்கிறது. நாங்கள் மருந்துகளின் மூலம் அவற்றை நீக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம். இறைவன் நாடினால் உங்களை எப்படியும் காப்பாற்றிவிடுவேன். நீங்கள் வாழவேண்டும். ' என்றார். உடல் முழுதும் நீலம் பாரித்துத் தோல் கறுத்துப் போயிருந்த நான் இன்னும் அபாயகட்டத்தைத் தாண்டவில்லையென அப்பொழுதுதான் உணர்ந்தேன்.

பல மணித்தியாலங்கள் கழித்துத் தரப்பட்ட முதல் தண்ணீர், தாகித்திருந்த நாவு வழியே சொட்டுச் சொட்டாக இறங்கியது. தொண்டை முதல் உள்நனைத்துப் போன அது சில நிமிடங்களே உள்ளே இருந்து பின்னர் வாந்தியாக வெளியே வரத் தொடங்கியது. ஒரு தாயின் பரிவோடு தாதி துடைத்துவிட்டாள். வைத்தியர் வந்து பார்த்து குளுக்கோஸ் மருந்துகளை நரம்பு வழியே தொடர்ந்தும் ஏற்றக் கட்டளையிட்டார். பெருங்கவலையோடும் பெருமூச்சோடும் தலைகோதி விட்டார். நான் புன்னகைத்தேன். பேச முயற்சித்தேன். வாந்திக்குப் பிறகு இப்பொழுதும் தொண்டை வழியே வெறும் காற்றுத்தான் வந்தது.

மணித்தியாலங்கள் நகர்ந்தன. நண்பர்கள் வந்து பார்த்துச் சென்றனர். இடையிடையே என்னுடன் கதைக்கவென நண்பரின் கைபேசிக்கு சகோதரியும் வீட்டாரும் முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிதும் சிரமத்தோடு அவ்வுரையாடல்களை எதிர்கொண்டேன். முழுதாக, எனக்குப் புதிதான அனுபவம் இது. நண்பர்கள் எல்லோரும் எனது நிலை வீட்டுக்குத் தெரியாதபடி பார்த்துக்கொண்டார்கள். தொடர்ந்தும் தோல்நிறம் கறுத்துக்கொண்டே போனது. எல்லோரும் போய் நானும் மருந்துகளின் உபயத்தில் கண்மூடிக் கிடந்த நேரம் சடுதியாக உடல் உஷ்ணம் அதிகரித்துக் கொண்டே போய் ஒரு நிலையில் பேச்சும் உடலசைவுகளும் உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகத் துவங்கியது. என்னையறியாமலே நான் மரணிக்கத் தொடங்கியிருந்தேன்.

(தொடரும்)


- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

33 comments:

Natchathraa said...

intha valikku marunthu edhuvum thara iyala nilaiyil irukiraen rishi..

unnaku nalla udal sugam kidaikkka iraivanai vendukiraen kaneerudan..

தமிழன் வேணு said...

அனைவரிடத்திலும் அன்பொழுகப் பழகும் உங்களுக்கு உடல்நலக்குறைவு
ஏற்பட்டதும், இத்தனை நண்பர்கள் இருந்தும் உடல்நலக்குறைவிலும் உடன் எவரும்
இல்லாது போனதும் இப்போது நினைத்தாலும் நெஞ்சைப் பிழிகிறது. உங்களைக்
குறித்து பல தமிழ்க்குழுமங்களில் அனைவரும் கவலைப்பட்டதும், எத்தனையோ
நல்லுள்ளங்கள் உங்களுக்காக இறைவனைப் பிரார்த்தித்ததும், நீங்கள் மீண்டு
வந்ததும், அனைத்துக் குழுமங்களிலும் மீண்டும் உற்சாகம் கரைபுரண்டோடியதும்
இவ்வுலகில் ஒரு மனிதன் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டியதன்
அவசியத்தையே வலியுறுத்தியது ரிஷான்.

எதையோ எழுதி சிரிக்க வைப்பது எளிது என்று தோன்றுகிறது. ஆனால், இயல்பாகவே
எழுதியும் அனுபவித்த இடர்களை இன்னொருவருக்குப் புரிய வைக்கிற திறன்
உள்ளவர்களில் நீங்களும் ஒருவர். நீடூழி வாழ்ந்து தொடர்ந்து எழுதி
அனைவரையும் மகிழ்விப்பீர்கள்! இது எனது நம்பிக்கை!

தமிழன்-கறுப்பி... said...

........


*அதற்கிடையில் எல்லா இடங்களிலும் மறுபடியும் எழுத தொடங்கிட்டியள். ம்ம்ம்... உடம்பை கவனியுங்கோ.

தொடர்பவன் said...

அதற்கிடையில் எல்லா இடங்களிலும் மறுபடியும் எழுத தொடங்கிட்டியள். ம்ம்ம்... உடம்பை கவனியுங்கோ.

ஃபஹீமாஜஹான் said...

"இடையிடையே என்னுடன் கதைக்கவென நண்பரின் கைபேசிக்கு சகோதரியும் வீட்டாரும் முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிதும் சிரமத்தோடு அவ்வுரையாடல்களை எதிர்கொண்டேன்."
அந்தத் தினத்தில் எழுதப்பட்டது தான் இது

2009.05.04 (16:14)

இன்று கதைத்து நீதானா?
அன்புத் தம்பி
அது நீதானா?


உனது குரல்
எனது நம்பிக்கைகளை உடைத்தது
உனது கோரிக்கை
எனது தைரியத்தைச் சிதைத்தது

எந்தப் பதிலுமளிக்காத
தொலைபேசி இலக்கமொன்றை
எம்மிடையே விட்டுப் போயிருந்தாய்
கடல்கள் தாண்டி
மலைகள் தாண்டி
ஏக்கத்துடன் திரும்பின
பல நூறு அழைப்புகள்

எல்லோரிடமும் புன்னகையை
மிதந்து போக விட்டுக் கொண்டிருக்கும்
நீ தான் இன்று
கைவிடப் பட்ட படகொன்றில்
அத்தனை பேரையும்
தவிக்க விட்டுள்ளாய்

தூர நாட்டில்
கிடத்தப் பட்டிருக்கும்
மருத்துவமனைக் கட்டிலொன்று
பிரார்த்தனைக்காக ஏந்தப் படும்
என் கரங்களுக்குள்ளே நடுநடுங்குகிறது
தனது அருளின் அரவணைப்புக்குள்
இறைவன் உனைக் காத்திட வேண்டுமென்று
உள்ளம் உருகியழுகிறது

டோஹாவின்
கடலே.. காற்றே....மண்ணே....
நட்சத்திரங்களே..சூரிய சந்திரரே..
அற்புதங்களைப் பொதித்து வைத்திருக்கும்
மாபெரிய வானகமே...
எங்கள் தம்பி நலம் பெற்று வந்துவிட
இறைவனிடம் முறையிடுங்கள்


ரிஷா.......................ன்
உன் வருத்தங்களை
எங்களுக்குத் தந்து விட்டு
நீ எழுந்து வந்து விடு
எமது ஆரோக்கியங்களை
உன்னுடலில் வாங்கிக் கொண்டு
இன்புற்று வாழ்ந்து விடு

கோபிநாத் said...

ம்

ராமலக்ஷ்மி said...

பஹீமாஜஹானின் கவிதை உறவுகளின் நட்புகளின் பிரார்த்தனையை உள்ளடக்கியதாய் உள்ளத்தைத் தொட்டு விட்டது.

அன்புடன் அருணா said...

இந்த நெடும் பயணத்திலிருந்து மீண்டு வந்தது ஒரு பேரதிஸயம் போலத் தெரிகிறது....வாழ்த்துக்கள் பிரார்த்தனையுடன்....

Unknown said...

my god.... nw wr r u?? wr s ur parents?? first take rest... u can write more... dont strain

M.Rishan Shareef said...

இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.html

M.Rishan Shareef said...

அன்பின் நட்சத்திரா,

//intha valikku marunthu edhuvum thara iyala nilaiyil irukiraen rishi..

unnaku nalla udal sugam kidaikkka iraivanai vendukiraen kaneerudan..//

உங்கள் அனைவரினதும் அன்பான பிரார்த்தனைகளே மீட்டெடுத்தது.

வருகைக்கும் அன்பான பிரார்த்தனைகளுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் வேணு ஐயா,


//அனைவரிடத்திலும் அன்பொழுகப் பழகும் உங்களுக்கு உடல்நலக்குறைவு

ஏற்பட்டதும், இத்தனை நண்பர்கள் இருந்தும் உடல்நலக்குறைவிலும் உடன் எவரும்
இல்லாது போனதும் இப்போது நினைத்தாலும் நெஞ்சைப் பிழிகிறது. உங்களைக்
குறித்து பல தமிழ்க்குழுமங்களில் அனைவரும் கவலைப்பட்டதும், எத்தனையோ
நல்லுள்ளங்கள் உங்களுக்காக இறைவனைப் பிரார்த்தித்ததும், நீங்கள் மீண்டு
வந்ததும், அனைத்துக் குழுமங்களிலும் மீண்டும் உற்சாகம் கரைபுரண்டோடியதும்
இவ்வுலகில் ஒரு மனிதன் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டியதன்
அவசியத்தையே வலியுறுத்தியது ரிஷான்.

எதையோ எழுதி சிரிக்க வைப்பது எளிது என்று தோன்றுகிறது. ஆனால், இயல்பாகவே
எழுதியும் அனுபவித்த இடர்களை இன்னொருவருக்குப் புரிய வைக்கிற திறன்
உள்ளவர்களில் நீங்களும் ஒருவர். நீடூழி வாழ்ந்து தொடர்ந்து எழுதி
அனைவரையும் மகிழ்விப்பீர்கள்! இது எனது நம்பிக்கை! //


உங்கள் கருத்துக்கள் என்னைப் பெரிதும் மகிழ்விக்கிறது.
மிகவும் நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன் கறுப்பி,

//........


*அதற்கிடையில் எல்லா இடங்களிலும் மறுபடியும் எழுத தொடங்கிட்டியள். ம்ம்ம்... உடம்பை கவனியுங்கோ.//

:)
நிச்சயமாக நண்பா.
இப்பொழுதெல்லாம் எழுத்து ஒன்று மட்டுமே பெரும் ஆறுதலைத்தருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் தொடர்பவன்,

//அதற்கிடையில் எல்லா இடங்களிலும் மறுபடியும் எழுத தொடங்கிட்டியள். ம்ம்ம்... உடம்பை கவனியுங்கோ.//

:)
நீங்களுமா? சரி :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜ்ஹான்,

//"இடையிடையே என்னுடன் கதைக்கவென நண்பரின் கைபேசிக்கு சகோதரியும் வீட்டாரும் முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிதும் சிரமத்தோடு அவ்வுரையாடல்களை எதிர்கொண்டேன்."
அந்தத் தினத்தில் எழுதப்பட்டது தான் இது //

கணத்துக்கொருதரம் நண்பரின் கைத்தொலைபேசி அதிர்ந்ததிர்ந்து உங்கள் பிரார்த்தனைகளைச் சொன்னபடி இருந்த நாட்களை நினைவுகூர்கிறேன். பேசக் கிடைத்த சந்தர்ப்பங்களிலும் அழுகையையும், தாங்கொணாத் துயரத்தையும் குரலோடு இடறியபடி எப்படிப் பொறுத்துக் கொண்டீர்களோ? :(

//2009.05.04 (16:14)

இன்று கதைத்து நீதானா?
அன்புத் தம்பி
அது நீதானா?


உனது குரல்
எனது நம்பிக்கைகளை உடைத்தது
உனது கோரிக்கை
எனது தைரியத்தைச் சிதைத்தது

எந்தப் பதிலுமளிக்காத
தொலைபேசி இலக்கமொன்றை
எம்மிடையே விட்டுப் போயிருந்தாய்
கடல்கள் தாண்டி
மலைகள் தாண்டி
ஏக்கத்துடன் திரும்பின
பல நூறு அழைப்புகள்

எல்லோரிடமும் புன்னகையை
மிதந்து போக விட்டுக் கொண்டிருக்கும்
நீ தான் இன்று
கைவிடப் பட்ட படகொன்றில்
அத்தனை பேரையும்
தவிக்க விட்டுள்ளாய்

தூர நாட்டில்
கிடத்தப் பட்டிருக்கும்
மருத்துவமனைக் கட்டிலொன்று
பிரார்த்தனைக்காக ஏந்தப் படும்
என் கரங்களுக்குள்ளே நடுநடுங்குகிறது
தனது அருளின் அரவணைப்புக்குள்
இறைவன் உனைக் காத்திட வேண்டுமென்று
உள்ளம் உருகியழுகிறது

டோஹாவின்
கடலே.. காற்றே....மண்ணே....
நட்சத்திரங்களே..சூரிய சந்திரரே..
அற்புதங்களைப் பொதித்து வைத்திருக்கும்
மாபெரிய வானகமே...
எங்கள் தம்பி நலம் பெற்று வந்துவிட
இறைவனிடம் முறையிடுங்கள்


ரிஷா.......................ன்
உன் வருத்தங்களை
எங்களுக்குத் தந்து விட்டு
நீ எழுந்து வந்து விடு
எமது ஆரோக்கியங்களை
உன்னுடலில் வாங்கிக் கொண்டு
இன்புற்று வாழ்ந்து விடு//

நன்றி அன்புச் சகோதரி !!!

M.Rishan Shareef said...
This comment has been removed by the author.
M.Rishan Shareef said...

அன்பின் கோபிநாத்,

//ம்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//பஹீமாஜஹானின் கவிதை உறவுகளின் நட்புகளின் பிரார்த்தனையை உள்ளடக்கியதாய் உள்ளத்தைத் தொட்டு விட்டது.//

ஆமாம் சகோதரி. உள்ளிலும் வெளியிலுமாக மிகுந்த சலனத்தை என்னிலும் அது ஏற்படுத்தியது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் அருணா,

//இந்த நெடும் பயணத்திலிருந்து மீண்டு வந்தது ஒரு பேரதிஸயம் போலத் தெரிகிறது....வாழ்த்துக்கள் பிரார்த்தனையுடன்....//

நிச்சயம் பேரதிசயம் தான் :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் லலிதா,

//my god.... nw wr r u?? wr s ur parents?? first take rest... u can write more... dont strain//

நான் கத்தாரில் இருக்கிறேன். எல்லோரும் இலங்கையில் இருக்கிறார்கள். நிச்சயம் ஆறுதலாக எழுதுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

துரை said...

ரிஷான்,ரிஷான்............
மனம் கனக்கவைத்துவிட்டீர்கள்...

சாந்தி said...

மிக பயங்கரமான அனுபவமாய்த்தான். இருக்குது....

பலவீனத்தின் போது அன்பு பல மடங்காய் தேவைப்படுகிறது பார்க்கப்படுகிறது...

சிகிச்சையின்போது மருத்துவரை கடவுளாய் பார்க்காதவர் உண்டா...


அழகா சொல்லிருக்கீங்க அனுபவத்தை..

பூங்குழலி said...

எத்தனை பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது ரிஷான் ..
அன்பான முகம் கோணாத மருத்துவர்களும் செவிலியரும் கிடைப்பதும் ஒரு வரம் தான் .

போனிஓ said...

மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியும் கூட இய்ந்திரங்கள்தான் .நாமும் ஒரு இய்ந்திரத்தை போலதான் அவர்களுக்கு.

சீனா said...

அன்பின் ரிஷான்

மருத்துவமனைத் துயர் - மருத்துவரின் அன்பான கவனிப்பு - அருமைத் தாதியின் உபசரிப்பு - நல்ல தொடர்

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா

போனிஒ said...

ரிஷான் பின்னால் நாங்கள் இருப்பது போல உங்கள் பின்னும் நாங்கள் இருக்கிறோம் என்பதனை மறவாதீர் .

நன்றி !!!

M.Rishan Shareef said...

அன்பின் துரை,

கருத்துக்கு நன்றி நண்பரே !!!

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

//மிக பயங்கரமான அனுபவமாய்த்தான். இருக்குது....

பலவீனத்தின் போது அன்பு பல மடங்காய் தேவைப்படுகிறது பார்க்கப்படுகிறது...//


ஆமாம்..நெருங்கியவர்களை மனம் அதிகம் தேடும் அந் நேரங்களில்..


//சிகிச்சையின்போது மருத்துவரை கடவுளாய் பார்க்காதவர் உண்டா...


அழகா சொல்லிருக்கீங்க அனுபவத்தை..//


கருத்துக்கு நன்றி சகோதரி !!

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//எத்தனை பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது ரிஷான் ..
அன்பான முகம் கோணாத மருத்துவர்களும் செவிலியரும் கிடைப்பதும் ஒரு வரம் தான் .//


ஆமாம்..இவர்கள் எனக்கென மட்டுமே பிரத்தியேகமாகப் போடப்பட்டிருந்தார்கள். 24 மணிநேரக் கண்காணிப்பு..ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக் கொண்டார்கள்..நீங்கள் சொல்வதுபோல வரம்தான்.

கருத்துக்கு நன்றி சகோதரி !!!

M.Rishan Shareef said...

அன்பின் ஃபோனிஓ,


//மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியும் கூட இய்ந்திரங்கள்தான் .நாமும் ஒரு இய்ந்திரத்தை போலதான் அவர்களுக்கு. //


எல்லோரும் அப்படியில்லை நண்பா !!!

கருத்துக்கு நன்றி !!!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சீனா,


//அன்பின் ரிஷான்


மருத்துவமனைத் துயர் - மருத்துவரின் அன்பான கவனிப்பு - அருமைத் தாதியின் உபசரிப்பு - நல்ல தொடர்

நல்வாழ்த்துகள் //


உங்கள் கருத்தினில் மகிழ்கிறேன். வாழ்த்துக்களுக்கு மிக நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் போனிஒ,

// ரிஷான் பின்னால் நாங்கள் இருப்பது போல உங்கள் பின்னும் நாங்கள் இருக்கிறோம் என்பதனை மறவாதீர் .//


நிச்சயமாக நண்பா.. :))
நன்றி !!!

M.Rishan Shareef said...

இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.html