Wednesday, June 10, 2009
இருப்புக்கு மீள்தல் - 05
இப்பொழுது புதிதாகக் காய்ச்சலும், தலைவலியும் சேர்ந்துவிட்டிருந்தது. பேசாமல் இறந்துபோயிருக்கலாமோ என எண்ணும்படியான வலி உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது. வாயைத் திறக்கவோ, பேசவோ, மெலிதாகப் புன்னகைக்கவோ கூட முடியாதபடி தசைகள் எல்லாம் இறுகிப் போய் வலித்தன. இருந்தும் பேச முயற்சித்தேன். எதுவுமே ஒத்துழைக்கவில்லை. பேச்சு வராமலே போய்விடுமோ எனவும் அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன். பார்க்க வந்தவர்கள் எல்லாம் விழிகள் கசியப் பார்த்து மௌனமாக நகர்ந்தனர். வைத்தியர் அடிக்கடி வந்துபார்த்து அன்பாக ஏதேனும் கதைத்துக் கொண்டிருந்தார். இருபத்துநான்கு மணித்தியாலங்களும் அந்த வைத்தியரும், இரண்டு தாதிகளும் என்னை அவர்களது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருந்தனர். ஈரானியச் சகோதரி என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் ஏதேனும் திரவ உணவுப்பொருட்கள் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்தார். எதையும் பருகமுடியவில்லை.
கண்களை மூடினால் இமைகளுக்குள் எரிந்தன. தூங்கவும் முடியவில்லை. இருந்தும் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் அகன்ற பின்னர் தூங்கமுயற்சித்தேன். ஏதேதோ யோசனைகள் தோன்றித் தோன்றி மறைய தலைக்குள் ஏதோ பெரும்பாரமாய் அழுத்தியது. எப்பொழுது தூங்கிப்போனேனென நினைவிலில்லை எனினும் தூங்கி எழும்போது காய்ச்சல் விட்டிருந்தது. அதற்குப் பதிலாக இடக் கையும், இடக் காலும் செயலிழந்து போயிருந்தது. ஒரு பாதி பொம்மையை என்னுடலின் இடப்புறத்தில் கிடத்திப் பொருத்தியது போல அப்பாகங்கள் அசையாமலும், அசைக்கமுடியாமலும் கிடந்தன. வைத்தியர் வந்துபார்த்து பதறிப்போனார். முதுகுப்புறத்தில் ஊசி ஏற்றினார். வாந்தியாகப் போனாலும் பரவாயில்லையென உப்புக் கலந்த பானம் ஏதோ பருக வைத்தார். பருகிச் சிறிது நேரத்திலேயே நான் திரும்பவும் தூங்கிப் போய்விட்டேன்.
எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேனென நினைவிலில்லை. யாரோ மிருதுவாக கைகளையும் புருவங்களையும் நீவி விட விழித்துக் கொண்டேன். புதிதாக இரு வைத்தியர்கள் அருகிலிருந்தார்கள். என்னைப் பற்றிய மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நான் விழித்ததும் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். அவர்களது செவிகளை எனது வாயருகே வைத்து பேசச் சொல்லிக் கேட்டார்கள். எனது கைகளைத் தம் கரங்களுக்குள் பொத்தி விரல் நகங்களை ஆராய்ந்தார்கள். எனது இமைகளை விரித்து ஒளி செலுத்தி உற்றுப் பார்த்தார்கள். சோதனைக் கூடப் பிராணியொன்றைப் போல வேதனையோடு எல்லாவற்றுக்கும் இசைந்துகொடுத்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ புது மருந்துகளுக்குப் பரிந்துரைத்துவிட்டு அவர்கள் நகர்ந்தார்கள்.
எனக்கான பிரார்த்தனைகள் நண்பர்களிடத்தில் தொடர்வதாக சகோதரி தொலைபேசியில் சொன்னார். தொடர்ந்த சிகிச்சையின் இரத்தப்பரிசோதனைகளில் குருதியில் கலந்திருந்த நச்சின் அளவு குறைந்துவருவதாக அறிக்கைகள் நற்செய்தி சொல்லிற்று. மரணத்திலிருந்து மீண்ட உடல் மருந்துகளையும், வைத்தியத்தையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது. காரணம் சகோதரியினதும் எல்லோரினதும் அன்பான பிரார்த்தனைகளன்றி வேறு என்ன?
அடுத்த சிலநாட்களில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் நல்லபடியான மாற்றம். உடல் புண்கள் ஆறத் தொடங்கியிருந்தன. உடலியக்கம் சீராகி, இறுக்கிப் பிடித்த தசை வலியும் உடல்வலியும் இனிப் போதுமெனச் சிறிது சிறிதாக விட்டு விலக ஆரம்பித்திருந்தன. வலியும் தொண்டை அடைப்பும் குறைந்து பேச ஆரம்பித்தேன். வைத்தியரின் நகைச்சுவைகளுக்குப் பழையபடி சிரிக்கமுடிந்தது. ஈரானியச் சகோதரி தினந்தோறும் உணவுப் பதார்த்தங்கள் செய்து கணவர் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தார். கஞ்சி, பழச்சாறு போன்ற திரவப்பதார்த்தங்களை தாதிகள் ஊட்டிவிட்டார்கள். உடலில் இணைக்கப்பட்டிருந்த மருந்துக் குழாய்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முழுதாக அகற்றப்பட்டன. அந்த அறைக்குள்ளேயே எழுந்து மெதுவாக வைத்தியரின் துணையோடு நடமாடத் தொடங்கினேன். எவ்வளவு நாளைக்கு அறைக்குள்ளேயே அடைந்துகிடப்பதென, தனித்து எழுந்து நடக்கமுயற்சித்த நாளில் கால்கள் துவள பளிங்குத் தரையில் வெட்டப்பட்ட மரம்போல வீழ்ந்தேன்.
(தொடரும்)
- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
படிக்கும் போது வேதனையாக இருக்கிறது ரிஷான்
நம்பிக்கை மீண்டும் துளிர்த்து வந்த ஒவ்வொரு வேளையிலும் மறுபடி வீழ்ந்துதான் எழுந்திருந்திருக்கிறீர்கள் போலும்:(!
ரிஷான், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் பணிபுரிகிறவன் என்ற முறையில் நோயாளிகளை மிகவும் அண்மையில் பார்த்திருக்கிறேன். மிடுக்காக உலவிய அதே மருத்துவமனையில் நானும் ஒரு முறை நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கிறேன். அது நோயாளிகள் குறித்த எனது அணுகுமுறையை மாற்றியது. சிகிச்சையைத் தவிர அவர்களுக்குத் தேவைப்படுகிற ஆறுதலான வார்த்தைகள், அவர்களது உறவினர்களுக்குத் தேவைப்படுகிற நம்பிக்கை, இவற்றின் முக்கியத்துவம் தெரிந்தது. இரண்டு நாட்களின் அவஸ்தையே போதும் போதுமென்றாகி விட்டது. ஒவ்வொரு நோயும், ஒவ்வொரு மரணமும் ஒருவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது என்பதை உணர எனக்கு அந்த இரண்டு நாட்களே போதுமானதாக இருந்தது.
அனைவரும் ஆரோக்கியத்துடன் இருங்கள்! மருத்துவமனை வாசம் வேண்டாம்! உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மன உளைச்சல் வேண்டாம். ரிஷானால் தாள முடிந்தது; அதை எழுத முடிந்தது; அந்தப் போராட்டதை நமக்குப் புரிய வைக்க முடிந்தது. இது போதும், வேறு எவருக்கும் வேண்டாம்.
தமிழன் வேணு
"ஒவ்வொரு நோயும், ஒவ்வொரு மரணமும் ஒருவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது என்பதை உணர எனக்கு அந்த இரண்டு நாட்களே போதுமானதாக இருந்தது."
உண்மை தான்.
"தம்பி ரிஷான் நலம்பெற வேண்டும்-2"
மனமுருகிக்கேட்ட பிரார்த்தனைகளின் முடிவில்
அடுத்துச் செய்வது
என்ன வென்றறியாமல்
வலிமிகுந்த கேள்விகள்
வீடெங்கும் பரவிப் போயிருந்த
இன்றைய அந்திப் பொழுதின்
பளுவை நீக்கி நீயழைத்தாய்
எஞ்சியிருக்கும் வலுவெலாம் திரட்டி
இரகசியக் குரலில் கதைத்தாய்
உயிர் பிழிபடும் வேதனையை
உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும்
வழியவிட்டாய்
உன் சிரித்த முகம்
உன்து புன்னகைக் குரல்
எல்லாவற்றையும்
இந்தப் பயங்கர நாட்களிடம்
பசியாறக் கொடுத்துவிட்டாய்
உனது தோள் மீது வந்தமரும்
பட்சிகளெதுவும் பறந்து வராத
அடிவான மலைத் தொடர்களை...
உன் குருதியில் கலந்திருக்கும் நஞ்சை
வாங்கிக் கொள்ளத் தெரியாமல் பார்த்திருந்த
விசாலமிகு வான வெளியை
வேதனை நிரம்பியிருக்கும்
மிகப் பெரிய கடலொன்றை
எண்ணித் தவிக்கிறாய்
இன்னும் நீ
நோவுகளில் இருந்து மீளவில்லை
இது வரையும் நீ
துயரத்தின் எல்லையைத் தாண்டவும் இல்லை
உனை ஆபதத்தில் கிடத்திக் கொண்டு
அடுத்தவரின் நிம்மதிக்காக
அனைத்தையும் மறைத்தாய்
உன் உடலில் புகுந்த நஞ்சை
நாங்கள் பருகியிருக்கக் கூடாதா?
உனை வதைக்கும் வலிகளை
நாங்கள் ஏற்றிருக்கக் கூடாதா?
அதிகாலையின் மீதும் பத்து இரவுகள் மீதும்
வானத்தின் மீதும் விடிவெள்ளியின் மீதும்
அந்த மாபெரும் நகர்மீதும் மலை மீதும்
சத்தியம் செய்பவனே....
எல்லாம் வல்ல ஒருவனே
எங்கள் தம்பியை
சுகப்படுத்தித் தந்துவிடு
நகரமுடியாத வேதனையின் சுமையுடன்
கால்களைச் சுற்றியிருக்கும்
இந்தக் காலத்தைப் போக்கிவிடு
//வலியும் தொண்டை அடைப்பும் குறைந்து பேச ஆரம்பித்தேன்//
பேசு ரிஷான் பேசு... :)))
மனிதம் பற்றிய துளிர்த்து எழுதல் இந்தத் தொடர்!
அதில் எழுத எழுத, நீ பட்ட வேதனை எல்லாம், அனலில் பட்ட மெழுகாய் கரைந்து ஓடட்டும்!
You will be alright all through the life Rishu! இனிய வாழ்த்துக்கள்!
ORU NALLA THOZHIYAAGA UNNARUGIL IRUNTHU UN VETHANAIYAI PAGIRNTHU KOLLA MUDIYAADHAVALAAGI PONEN..
MANNITHU VIDU..
NEE GUNAM ADAINTHAAI ENBATHE ENAKU POTHUM....
nee yedho oru nanmaikkaga padaikkap pattai.....un arivu sudar....ovvoru manadhaiyum thanga malaiyaai urumaatri...un vaarthai kodaariyaal sedhukki pogum sirpiyaai pirapeduthaai...nee meendadhu....naangalae meendadhu pol.....unakoru kuraiyum ini varaadhu......iraivan unnodu endrum iruppar......
அன்பின் பூங்குழலி,
//படிக்கும் போது வேதனையாக இருக்கிறது ரிஷான் //
ம்ம்..
உங்கள் அனுபவத்திலும் நிறையப் பார்த்திருப்பீர்கள். சிலது வேதனை தரக்கூடியதுதான். :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ராமலக்ஷ்மி,
//நம்பிக்கை மீண்டும் துளிர்த்து வந்த ஒவ்வொரு வேளையிலும் மறுபடி வீழ்ந்துதான் எழுந்திருந்திருக்கிறீர்கள் போலும்:(!//
:)
வீழ்ந்து வீழ்ந்து எழுந்ததால் இன்னும் தன்னம்பிக்கை அதிகரித்துவிட்டது போலிருக்கிறது சகோதரி :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
அன்பின் வேணு,
//ரிஷான், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் பணிபுரிகிறவன் என்ற முறையில் நோயாளிகளை மிகவும் அண்மையில் பார்த்திருக்கிறேன். மிடுக்காக உலவிய அதே மருத்துவமனையில் நானும் ஒரு முறை நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கிறேன். அது நோயாளிகள் குறித்த எனது அணுகுமுறையை மாற்றியது. சிகிச்சையைத் தவிர அவர்களுக்குத் தேவைப்படுகிற ஆறுதலான வார்த்தைகள், அவர்களது உறவினர்களுக்குத் தேவைப்படுகிற நம்பிக்கை, இவற்றின் முக்கியத்துவம் தெரிந்தது. இரண்டு நாட்களின் அவஸ்தையே போதும் போதுமென்றாகி விட்டது. ஒவ்வொரு நோயும், ஒவ்வொரு மரணமும் ஒருவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது என்பதை உணர எனக்கு அந்த இரண்டு நாட்களே போதுமானதாக இருந்தது. //
ஆமாம் நண்பரே.. நாம் பார்வையாளராக இருக்கும்போது வெறுமனே பார்த்துக் கடந்துபோவதை, அனுபவத்தில் உணரும்போதுதான் அதன் வலி புரிகிறது.
//அனைவரும் ஆரோக்கியத்துடன் இருங்கள்! மருத்துவமனை வாசம் வேண்டாம்! உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மன உளைச்சல் வேண்டாம். ரிஷானால் தாள முடிந்தது; அதை எழுத முடிந்தது; அந்தப் போராட்டதை நமக்குப் புரிய வைக்க முடிந்தது. இது போதும், வேறு எவருக்கும் வேண்டாம்.//
நிச்சயமாக !
இந்த வலி, வேதனை இனி எவர்க்கும் வரக் கூடாது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//"ஒவ்வொரு நோயும், ஒவ்வொரு மரணமும் ஒருவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது என்பதை உணர எனக்கு அந்த இரண்டு நாட்களே போதுமானதாக இருந்தது."
உண்மை தான்.
"தம்பி ரிஷான் நலம்பெற வேண்டும்-2"
மனமுருகிக்கேட்ட பிரார்த்தனைகளின் முடிவில்
அடுத்துச் செய்வது
என்ன வென்றறியாமல்
வலிமிகுந்த கேள்விகள்
வீடெங்கும் பரவிப் போயிருந்த
இன்றைய அந்திப் பொழுதின்
பளுவை நீக்கி நீயழைத்தாய்
எஞ்சியிருக்கும் வலுவெலாம் திரட்டி
இரகசியக் குரலில் கதைத்தாய்
உயிர் பிழிபடும் வேதனையை
உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும்
வழியவிட்டாய்
உன் சிரித்த முகம்
உன்து புன்னகைக் குரல்
எல்லாவற்றையும்
இந்தப் பயங்கர நாட்களிடம்
பசியாறக் கொடுத்துவிட்டாய்
உனது தோள் மீது வந்தமரும்
பட்சிகளெதுவும் பறந்து வராத
அடிவான மலைத் தொடர்களை...
உன் குருதியில் கலந்திருக்கும் நஞ்சை
வாங்கிக் கொள்ளத் தெரியாமல் பார்த்திருந்த
விசாலமிகு வான வெளியை
வேதனை நிரம்பியிருக்கும்
மிகப் பெரிய கடலொன்றை
எண்ணித் தவிக்கிறாய்
இன்னும் நீ
நோவுகளில் இருந்து மீளவில்லை
இது வரையும் நீ
துயரத்தின் எல்லையைத் தாண்டவும் இல்லை
உனை ஆபதத்தில் கிடத்திக் கொண்டு
அடுத்தவரின் நிம்மதிக்காக
அனைத்தையும் மறைத்தாய்
உன் உடலில் புகுந்த நஞ்சை
நாங்கள் பருகியிருக்கக் கூடாதா?
உனை வதைக்கும் வலிகளை
நாங்கள் ஏற்றிருக்கக் கூடாதா?
அதிகாலையின் மீதும் பத்து இரவுகள் மீதும்
வானத்தின் மீதும் விடிவெள்ளியின் மீதும்
அந்த மாபெரும் நகர்மீதும் மலை மீதும்
சத்தியம் செய்பவனே....
எல்லாம் வல்ல ஒருவனே
எங்கள் தம்பியை
சுகப்படுத்தித் தந்துவிடு
நகரமுடியாத வேதனையின் சுமையுடன்
கால்களைச் சுற்றியிருக்கும்
இந்தக் காலத்தைப் போக்கிவிடு//
அருமையான கவிதை. காலத்தின் நிஜத்துக்குள் நுழைந்திருந்த உங்களினதும் நம் நண்பர்கள் அனைவரினதும் பிரார்த்தனைகளினாலேயே எழுந்துவர முடிந்தது !
வருகைக்கும் கவிதைக்கும் நன்றி சகோதரி !
அன்பின் கண்ணபிரான் இரவிஷங்கர்,
////வலியும் தொண்டை அடைப்பும் குறைந்து பேச ஆரம்பித்தேன்//
பேசு ரிஷான் பேசு... :)))
மனிதம் பற்றிய துளிர்த்து எழுதல் இந்தத் தொடர்!
அதில் எழுத எழுத, நீ பட்ட வேதனை எல்லாம், அனலில் பட்ட மெழுகாய் கரைந்து ஓடட்டும்!
You will be alright all through the life Rishu! இனிய வாழ்த்துக்கள்! //
ம்ம்..அனல் மேலே பனித்துளி? :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் புவனா,
//ORU NALLA THOZHIYAAGA UNNARUGIL IRUNTHU UN VETHANAIYAI PAGIRNTHU KOLLA MUDIYAADHAVALAAGI PONEN..
MANNITHU VIDU..
NEE GUNAM ADAINTHAAI ENBATHE ENAKU POTHUM....//
நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறாய்..நலமா?
விரைவில் கதைப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !
அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,
//nee yedho oru nanmaikkaga padaikkap pattai.....un arivu sudar....ovvoru manadhaiyum thanga malaiyaai urumaatri...un vaarthai kodaariyaal sedhukki pogum sirpiyaai pirapeduthaai...nee meendadhu....naangalae meendadhu pol.....unakoru kuraiyum ini varaadhu......iraivan unnodu endrum iruppar......//
அழகான வரிகள். இறைவன் என்றும் நம்முடன் இருக்கட்டும் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...
http://mrishansharif.blogspot.com/2009/06/05.html
முகந் தெரியா நண்பா!
உன் கவி படித்து ரசிகையானேன் உன்னிடம் ..
என் வாழ்நாள் என்றும் ரசிக்க வேண்டும் ..
அதற்காகவெனும்
நலமே வாழ வேண்டும் நீ !
எத்தனையோ நபர்களை நிஜ உலகிலும், இணையத்திலும் சந்திக்கிறோம். ரயில்
சினேகிதம் போல, அந்த நட்பு சில சமயங்களில் இடம் வந்ததும் திசை மாறிச்
சென்று விடுவதையும் பார்க்கிறோம். முன்பின் பார்த்திராத ஒரு அன்பருக்காக,
எத்தனை எத்தனை பேர்கள் பதறிப் பதைத்து, கைபிசைந்து, கடவுளை வேண்டி,
கவலையுற்று அறிந்தவர், அறியாதவர் அனைவரிடத்திலும் விசாரித்து, இறுதியில்
மீண்டு வந்ததும், நிம்மதிப்பெருமூச்சு விட்டு...இதெல்லாம்
மனம்,வாக்கு,செயல் ஆகிய மூன்றிலுமே நல்லெண்ணமும் நட்பும் கொண்ட உங்களைப்
போன்றோர்க்கே கிடைக்கக் கூடியவை! வாழ்வின் ஒரு துன்பமயமான
அனுவத்திலிருந்து மீண்டு வந்த நீங்கள், இனி வரும் காலங்களில்
மகிழ்ச்சிதரும் அனுபவங்களை மட்டுமே நேர்கொண்டு, அதை எம்மோடு பகிர்ந்து
கொள்ள வேண்டும் என்று விழைகிறேன். நூறாண்டு காலம்,நோய் நொடியின்றி வாழ
எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!
அன்பின் வேணு ஐயா,
//எத்தனையோ நபர்களை நிஜ உலகிலும், இணையத்திலும் சந்திக்கிறோம். ரயில்
சினேகிதம் போல, அந்த நட்பு சில சமயங்களில் இடம் வந்ததும் திசை மாறிச்
சென்று விடுவதையும் பார்க்கிறோம். முன்பின் பார்த்திராத ஒரு அன்பருக்காக,
எத்தனை எத்தனை பேர்கள் பதறிப் பதைத்து, கைபிசைந்து, கடவுளை வேண்டி,
கவலையுற்று அறிந்தவர், அறியாதவர் அனைவரிடத்திலும் விசாரித்து, இறுதியில்
மீண்டு வந்ததும், நிம்மதிப்பெருமூச்சு விட்டு...இதெல்லாம்
மனம்,வாக்கு,செயல் ஆகிய மூன்றிலுமே நல்லெண்ணமும் நட்பும் கொண்ட உங்களைப்
போன்றோர்க்கே கிடைக்கக் கூடியவை! வாழ்வின் ஒரு துன்பமயமான
அனுவத்திலிருந்து மீண்டு வந்த நீங்கள், இனி வரும் காலங்களில்
மகிழ்ச்சிதரும் அனுபவங்களை மட்டுமே நேர்கொண்டு, அதை எம்மோடு பகிர்ந்து
கொள்ள வேண்டும் என்று விழைகிறேன். நூறாண்டு காலம்,நோய் நொடியின்றி வாழ
எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்! //
உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும் அன்பு நண்பரே !
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
Dear Brother
Inru thaan ungal web parkiren.
ithu warai kettariyada widayangalai supera solli irukkirirgal. Hapatities aal naanum padikka pattiruppathal wali theriyun.
Romba kavalai. Allh with u always
Dear Brother
Inru thaan ungal web parkiren.
ithu warai kettariyada widayangalai supera solli irukkirirgal. Hapatities aal naanum padikka pattiruppathal wali theriyun.
Romba kavalai. Allh with u always
அன்பின் எச்.எப்.ரிஸ்னா,
//Dear Brother
Inru thaan ungal web parkiren.
ithu warai kettariyada widayangalai supera solli irukkirirgal. Hapatities aal naanum padikka pattiruppathal wali theriyun.
Romba kavalai. Allh with u always//
உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
Post a Comment