Friday, November 16, 2007

இருபது ரூபாய் நோட்டு !


நரகலையெடுத்து தனது சட்டைப் பைக்குள் தானே போட்டுக் கொண்டதாய் அருவருப்பாய் உணர்ந்தார் அவர். பணம் தான். சாதாரண இருபது ரூபாய் நோட்டு. இத்தனைக்கும் ஊரில் பெரிய மனிதர் என்று பெயர் வாங்கியிருக்கிறார்.

திருப்பி கொடுத்து விடலாம் என்கிற முடிவோடு பையனை நெருங்கினார். விடிகாலைதான் என்றாலும் அதற்குள் இரண்டு , மூன்று பேர் கூடி விட்டார்கள் . இப்பொழுது
" நான்தான் பா , கீழே விழுந்து கிடந்த உன் இருபது ரூபாய் நோட்டை எடுத்தேன் "
என்று கொடுத்தால் தனக்குத்தான் அவமானமென்று கொஞ்சம் சிந்தித்தார். அமைதியாய் இருந்தார். பையன் மட்டும் அழுது கொண்டிருந்தான்.

அவர் வழமை போல் உடற்பயிற்சிக்காக சிறிது நடந்து விட்டு வரலாம் என்று வந்த போதுதான் கீழே கிடந்த இந்த இருபது ரூபாய் நோட்டு கண்ணில் பட்டது. என்ன தோன்றியதோ... சுற்றுமுற்றும் பார்த்து எடுத்து சட்டைப் பையில் அனிச்சையாகப் போட்டுக் கொண்டார்.

சற்று தூரம் நடந்து விட்டு திரும்பி வரும் வழியில்தான் தான் ரூபாய் நோட்டைக் கண்டெடுத்த அதே இடத்தில் பேப்பர் , பால் போடும் பத்து,பதினொறு வயது மதிக்கத்தக்க பையன் நின்று அழுது கொண்டிருப்பதைக் கவனித்தார்.

வீடுகளிலிருந்து கிடைத்த பணத்தை அந்த இடத்தில் வைத்து எண்ணியதாகவும் அப்பொழுதுதான் விழுந்திருக்கக் கூடும் என்பது அவன் எண்ணம் . ஊகம் சரிதான்.

ஏற்கெனவே அவன் முதலாளி தொட்டதெற்கெல்லாம் சந்தேகப்படும் சந்தேகப் பிராணி எனவும் நோட்டு தொலைந்ததையும் நம்ப மாட்டார் என்பதையும் விம்மலிடையே சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒரு முடிவுக்கு வந்தவராய் ஏற்கெனவே தனது சட்டைப் பையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
" வேணாம் ஸார் . இன்னிக்கு நீங்க தருவீங்க. நாளைக்கு நான் திரும்பவும் தொலைச்சா யாராவது தருவாங்களான்னு எதிர்பார்க்கத் தோணும். ஒவ்வொருத்தரிடமும் கை நீட்டத் தோணும். வேணாம் ஸார். ரொம்ப தாங்க்ஸ் ."
சொன்னவன் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டான் என்பது கூட புரியாமல் அதிர்ந்து நின்றார். மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

வழமையை விடத் தாமதிக்கும் கணவனை எதிர்பார்த்து, கேட்டருகே காத்திருந்த அவர் மனைவிக்கு , வீட்டில் அதிரடியாக நாத்திகம் பேசும் கணவன் தெருமுனைக் கோயில் உண்டியலில் காசு போட்டுக் கும்பிடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

- எம். ரிஷான் ஷெரீப் ,
இலங்கை.

32 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நறுக்கென்ற ,
நல்ல கதை; அழகாக சொல்லியுள்ளீர்.

Unknown said...

எனது சிறுகதைகளுக்கான முதல் பதிவில் முதல் கருத்து உங்களுடையது யோகன்..:)
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள் நண்பரே.

Anonymous said...

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..

நல்லாருக்கு ரிஷான்

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு..

Anonymous said...

நல்லா இருக்கு

Anonymous said...

நறுக்கென இருக்கு

Anonymous said...

காசு (20 ரூபாய்) போட்டார்னு மட்டும் சொல்லி இருந்திருக்கலாம். 'கும்பிட்டார்'னு சொல்லி இருந்திருந்திருக்க வேண்டாம். இந்த சின்ன விசயத்துக்காக ஆத்திகவாதி ஆனாருன்னா, அடுத்த வாரமே வேற ஒரு விசயத்துக்காக மறுபடியும் நாத்திகவாதி ஆயிடுவார்.

(ரிஷான், நான் உங்க ஓர்குட் பிரண்ட் லிஸ்டில் இருக்கேன். நான் யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்)

Anonymous said...

சரியான சவுக்கடி மனிதனின் பலகீனங்களுக்கு

அன்புடன்
தமிழ்த்தேனீ

Anonymous said...

ரிஷான் அதற்குபிறகு நீங்கள் பணம் தொழைத்தே இல்லையா? :):) பாவம் நீங்க....

உன்மையில் கதை நன்றாக்வே உள்ளது

தொடருங்கள்

நன்றி.....

என்றும் அன்புடன்
சபூர் ஆதம்

Anonymous said...

இப்படித் திருந்துதல் கதைகளிலும் திரைகளிலும் மட்டும்தான் சாத்தியமா?

ரிஷான், நல்ல கருத்து.
"வாழ்த்துகள் ரிஷான்."

Unknown said...

நன்றி சாந்தி :)

Anonymous said...

'நச்'சுன்னு இருக்கு கதை. செய்த தப்பை உணர்தலே அழகு.
கதை அருமை

Anonymous said...

அன்பு ரிஷான் ஜி சின்னக்கதை ஆனால் கருத்து ஆழம் அதிகம் மிகவும் பிடித்தது
அன்புடன்விசாலம்

Unknown said...

நன்றி தணிகை :)))

Unknown said...

நன்றி கீதா... :)))

Unknown said...

நன்றி நண்பரே :)))

Unknown said...

கருத்துக்கு நன்றி நண்பரே :)))
(கண்டு பிடிச்சு ஒரு ஸ்கிராப் அனுப்பியிருக்கேன்.சீக்கிரமா பதிலனுப்புங்க )

Unknown said...

நன்றி தமிழ்த்தேனீ நண்பரே.. :)))

Unknown said...

நன்றி சபூர் :)))

Unknown said...

நன்றி விஜி சுதன் :)))

Anonymous said...

நன்றாக இருக்கிறது ரிஷான்!

Unknown said...

நன்றி சேதுக்கரசி :)))

Unknown said...

நன்றி சகாரா :)))

Unknown said...

நன்றி விசாலம் அம்மா :)))

Divya said...

சிந்திக்க வைக்கும் கருத்துள்ள கதை....அழகான முடிவுடன்:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நச்-னு ஒரு கதை ரிஷான்!
முடிவு சூப்பர்! முடிவு தான் நல்ல சிந்தனைகளுக்குத் தொடக்கமாய் இருக்கு!

//வீட்டில் அதிரடியாக நாத்திகம் பேசும் கணவன் தெருமுனைக் கோயில் உண்டியலில் காசு போட்டுக் கும்பிடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது//

கே: கடவுள் எப்போது தெரிவார்?
ப: மனம் போராடும் போது!
- ஜான் மில்டன்

:-)

Unknown said...

அன்பின் திவ்யா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)

Unknown said...

வாங்க ரவிசங்கர்,
//முடிவு தான் நல்ல சிந்தனைகளுக்குத் தொடக்கமாய் இருக்கு!//

அருமையான கருத்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

கோகுலன் said...

கதை நல்லாயிருக்கு ரிஷான்..

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர்..

Unknown said...

அன்பின் கோகுலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

வாங்க மதுரையம்பதி :)
உங்களது முதல் வரவு என்று நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)