Tuesday, May 26, 2009

இருப்புக்கு மீள்தல் - 02

 
       சவத் துணி உடுத்து, சவப்பெட்டிக்குள் படுத்து, சூழப் பல இதயங்களை விம்மச் செய்தபடி கல்லறைக்கு நகரும் ஊர்வலம் இப்பொழுது எனக்கு வாய்க்கவில்லை. வாழ்தலுக்கான உத்வேகத்தைத் தரும்படியான எந்தவொரு நிகழ்வும் சமீபத்தில் நடக்கவில்லைதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்நாட்டு வெயிலைப்போல தனிமை துரத்தியதுதான். சில துரோகங்களைத் தாங்கச் சக்தியற்றதான மனம் பல நாட்களாக உணவு மறுத்து, புன்னகை மறுத்து, உறக்கம் மறுத்து அழுதுவழிந்து தவித்துக் கிடந்ததுதான். அதற்காக மரணம் ஒரு விமோசனமா?

        ஒரு இளம் மருத்துவரைத் தாதி உடனே அழைத்துவந்தாள். ஒரு ஆறுமாதக் குழந்தையைப் போன்ற புன்னகையொன்று அவர் முகத்தில் தவழ்ந்தது. எனது உடல் நிலைமை குறித்து என்னை விடவும் நன்கறிந்தவர் அவரெனினும் என்னிடமே அன்பாக விசாரித்தார். தலை கோதிவிட்டார். எனக்கு என்ன நிகழ்ந்திருந்ததென மென்மையாகச் சொன்னார். எனது உடல் மிகவும் பலவீனமுற்று இருப்பதாகவும் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளும்படியும் கூறி, புன்னகைக் குழந்தையை என்னிடம் தந்து நகர்ந்தவர், அவ்வளவு நேரமும் காத்திருந்தவர்களுள் எனக்கென கையெழுத்திட்ட நண்பரை மட்டும் என்னிடம் வர அனுமதித்தார். ஏதோ ஒரு அச்சத்தில் பதறியபடி உள்ளே வந்தவர் எனது விழிப்பைக் கண்டதும் மகிழ்ந்துபோனார். எனது வீட்டின் இலக்கம் வாங்கித் தன் கைபேசியில் அழுத்தி சகோதரனிடம் பேசச் சொன்னார்.

        உடலில் விஷமேறி நான் மருத்துவமனையின் வெள்ளை விரிப்பில், தாண்டப் போகும் அபாயகட்டத்தை நகர்த்தியபடி சோர்வாக பச்சைத் திரைச்சீலைகளைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருக்கிறேனென்பதனை வீட்டார் அறிவார்களா? அவர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்தபொழுது மிகவும் நலமாக இருப்பதாகப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது. மாதக்கணக்கில் பேசும் வாய்ப்புக் கிட்டாமல் முதன்முதல் உரையாடியபொழுது இத் துயரச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள மனம் அனுமதிக்கவில்லை. ஏதேதோ பேசினோம்.

        நான் விழித்த செய்தியை, வெளியே காத்திருந்தவர்களிடம் சொல்லவென நண்பர் அகன்ற பின்னர் கண்களை மூடிக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. தொடர்ச்சியாக முப்பத்தாறு மணித்தியாலங்கள் மயங்கிக் கிடந்தது போதாதா? வெளியுலகில் ஏது நடக்கிறதென அறியாமல் விழி மூடிக்கிடந்தது போதாதா? ஏதோ ஒரு நினைப்பு மனதினில் பெரும்பாரமாய் வந்து உட்கார்ந்தது. வேறு சிந்தனைக்கு மாறச்சொல்லி மனதை ஊக்குவித்தேன். உறக்கத்துக்குப் பதில் இறுதியாக, இதற்கும் முதலாக எப்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேனென்பது நினைவுக்கு வந்தது.

        முன்பொரு நாள் இதுபோல மஞ்சள் காமாலை என்னில் மிக உக்கிரமாகத் தாக்கி வைத்தியசாலையில் மயங்கிக் கிடந்திருக்கிறேன். அது எனது உயர்தரப்பரீட்சை நேரம். மயக்கம் தெளிந்தபோது அம்மாவும் சகோதரர்களும் அருகிலிருந்தது இன்னும் நினைவிலிருக்கின்றது. அழுது சிவந்த அம்மாவின் கண்கள் கண்ணாடித் தொட்டியில் பேணி வளர்க்கப்படும் செம்மஞ்சள் தங்கமீன்களை ஒத்தவையாயிருந்தன. விழித்தெழுந்து நான் மிகவும் மன்றாடி, வைத்தியரிடம் அனுமதி வாங்கி வைத்தியசாலையிலிருந்தே பரீட்சை எழுதவெனப் போய் எழுதிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டேன். வயிற்றின் மேற்பகுதியில், நெஞ்சின் வன்கூட்டுக்குக் கீழ்பகுதியில் தசை மேலெழுந்திருந்தது. ஈரல் மிகவும் உக்கிரமாக வீங்கியிருக்கிறதென வைத்தியர் சொன்னார். அம்மா மிகவும் பயந்துபோனார். நான் மருந்துகளின் உபயத்தில் ஏதுமறியாது உறங்கிக்கொண்டிருந்தேன். முன் தினம்தான் மஞ்சள்காமாலை தாக்கி ஈரல் வீங்கிய சிறுமியொருத்தி அதே வைத்தியசாலையில் செத்துப் போயிருந்தாள். கூற்றுவன் அப்பொழுதும் அம்மாவின் அருகிலமர்ந்து என்னைப் பார்த்திருந்திருக்கக் கூடும்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

34 comments:

பூங்குழலி said...

வார்த்தைகளுக்கு ஊடே உணர்வுகளை வைத்துப் பூட்டும் வித்தை உங்களுக்கு என்றோ வசப்பட்டது . இதை படிக்கும் போது சிலீரென ஒரு பயம் பரவி அடங்குகிறது.
கடவுளுக்கு நன்றி .

துளசி கோபால் said...

(-:

Natchathraa said...

ezhuthi irukkum oru oru vaarathaiyum manathil oru perum baarathaiyee etrukirathu...

irupinum ne meendu vandha intha pozhudhu migavum inbamaga irukku rishi...

endrendrum sugathudan vazha iraivanai mandradi vendikolgiraen...

அமுதா said...

/*திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்நாட்டு வெயிலைப்போல தனிமை துரத்தியதுதான். */
தனிமை மிகக் கொடியது :-(

பூரண நலம் பெற்றுவிட்டீர்களா?

Gowripriya said...

உங்களின் சொல்லாடல் மனதில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துதல் எங்களுக்குப் புதிதல்ல... என்றாலும் ஏதோ ஒரு பயம் எம்முடன் பயணிக்கிறது இந்தப் பதிவைப் படிக்கையில்... வாழ்க்கையின் கொடிய தருணங்களை அழகாக வார்த்தைப் படுத்துகிறீர்கள்.. வாழ்த்துகள்..

சென்ஷி said...

:-(

சா.கி.நடராஜன். said...

அன்பு ரிஷான் நீ ஒரு மகான் பொய் அல்ல மெய்
இது தான் நான் உனக்கு எழுதும் முதல் மடல்
உன்னை முன் பின் அறிந்ததில்லை இருப்பினும் பல குழுமங்களில் நான் சேர்ந்த நேரம் குழுமங்களில் நீ எங்கே என்று கேள்விக்கணை தொடுத்து தவித்த உறவுகள் நிச்சயம் உன் தொப்புள் கோடி உறவுகள் அல்ல என நான் அறிவேன்
என்னே உன் விந்தை என்ன செய்தாய் இத்தனை உள்ளங்களையும் கொள்ளைக் கொள்ள
துடித்து போனார்களே ! தெரிந்தவர்களுக்கெல்லாம் உன்னைத் தேடச் சொன்னார்களே ! கடைசியில் உணவே எதிரானதால் மருத்துவமனையில் நீ இருக்கின்றாய் என்றதும் எத்தனை சர்வ மத பிரார்த்தனைகள் !
இதோ நீ நலமாகிவிட்டாய் என்றவுடன் என்னே ஒரு பூரிப்பு இந்த பரிவினை தங்கள் குடும்பத்து நபர் மீது இதே அளவு காடியிருப்பார்களா என்பது சந்தேகமே ! மரணத்தைக் கடந்தவன் நீ ஒரு வேண்டுகோள் இனி உனக்காக வாழாதே இனி ஒவ்வொரு நாளும் உன்னால் முடிந்த உதவியினை இயலாதவர்க்கு செய்துவிடு
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் உம பெற்றோர்கள் பேரு பெற்றவர்கள் உன்னைப் போன்ற மகனை பெற்றதற்கு அவர்களின் தர்மம் உன்னைக் காக்கும் வாழ்த்துக்கள் நண்பா (சொல்லலாமா ?)
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்

அகமது சுபைர் said...

ரிஷு..

உனக்கு நேர்ந்த இந்த வலி, உன்னைத் தொடர்புகொள்ள நேர்ந்த பகீரதப் பிரயத்தனங்கள் பொய்யாய் போனது என பல இன்னல்கள் இன்னும் என்னை விட்டுப் பிரியாதிருக்கிறது.

கடவுளுக்கு நன்றி..

ராமலக்ஷ்மி said...

அனுபவித்த வலிகளை அத்தனை வரிகளும் உணர்த்துகின்றன.

கோபிநாத் said...

ம்ம்..;(

Unknown said...

Get Well soon Rishu...

வெயிலான் said...

வலியை வார்த்தையில் வடித்திருக்கும் விதத்தில் எங்களுக்கும்.......

Unknown said...

இருப்புக்கு மீள்தல் - 03 இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/03.html

Unknown said...

அன்பின் பூங்குழலி,

//வார்த்தைகளுக்கு ஊடே உணர்வுகளை வைத்துப் பூட்டும் வித்தை உங்களுக்கு என்றோ வசப்பட்டது . இதை படிக்கும் போது சிலீரென ஒரு பயம் பரவி அடங்குகிறது.
கடவுளுக்கு நன்றி .//

ஒரு மருத்துவராக இது போன்ற பல அனுபவங்களை நீங்கள் சந்தித்திருக்கக் கூடும். என்னால் இன்னும் அனுபவித்த சிலவற்றை எழுத்துக்களில் விபரிக்கத் தெரியவில்லை. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் துளசி டீச்சர்,

நமது அன்பான கோகியை இழந்த வருத்தம் எனக்குப் புரிகிறது. உங்கள் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன் !

Unknown said...

அன்பின் நட்சத்திரா,

//ezhuthi irukkum oru oru vaarathaiyum manathil oru perum baarathaiyee etrukirathu...

irupinum ne meendu vandha intha pozhudhu migavum inbamaga irukku rishi...

endrendrum sugathudan vazha iraivanai mandradi vendikolgiraen...//

உங்கள் அனைவரினதும் அன்புப் பிரார்த்தனைகளே மீண்டெழச் செய்தன !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் அமுதா,

///*திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்நாட்டு வெயிலைப்போல தனிமை துரத்தியதுதான். */
தனிமை மிகக் கொடியது :-(

பூரண நலம் பெற்றுவிட்டீர்களா?//

ஆமாம்..இன்னும் சற்று ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். சும்மா இருக்க முடியவில்லை :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் கௌரிப்ரியா,

//உங்களின் சொல்லாடல் மனதில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துதல் எங்களுக்குப் புதிதல்ல... என்றாலும் ஏதோ ஒரு பயம் எம்முடன் பயணிக்கிறது இந்தப் பதிவைப் படிக்கையில்... வாழ்க்கையின் கொடிய தருணங்களை அழகாக வார்த்தைப் படுத்துகிறீர்கள்.. வாழ்த்துகள்..//

இப்படியான ஒரு தருணம் வாழ்வில் வந்துபோனதையிட்டு மகிழ்வாகவும் இருக்கிறது. பல உண்மையான அன்புள்ளங்களை கண்டுகொள்ள முடியுமானது எனக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் நண்பர் சென்ஷி,

//:-(//

:)
இப்பொழுது சிரிக்கலாமே :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் சா.கி.நடராஜன் ஐயா,

இனிய வணக்கங்கள்.

உங்கள் ஆழ்மன அன்பினை வெளிப்படுத்தியபடி எழுதப்பட்டிருக்கும் இம்மடல் பார்த்து இதயம் குளிர்ந்துபோனேன்.

நீங்கள் சொல்வது சரிதான். இங்கு என்னைத் தேடிய மற்றும் எனக்காகப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்கள் அனைவரும் எனது தொப்புள்கொடி உறவுகளல்ல. அவர்கள் என்னைச் சந்தித்ததும் இல்லை. நேரில் பார்த்தது கூட இல்லை. புகைப்படத்தில் பார்த்தவர்கள் கூட அரிதாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன்.

ஆனாலும், அன்பென்ற ஒன்றை அள்ள அள்ளக் குறையாமல் தந்தார்கள். தந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களது குடும்பத்திலொருவனாக அல்லது நீங்கள் சொல்வது போல அதை விடவும் மேலானவனாக என்னை வைத்திருக்கிறார்கள். சிறு வயதிலிருந்து வீட்டை, எனது தாயை, சகோதரர்களை எப்பொழுதும் விட்டுப் பிரிந்து வளர்ந்தவனில்லை. தேசத்தின் சூழ்நிலை காரணமாக வேற்று தேசத்துக்கு வந்த பிறகு அதீதமான வெறுமை மற்றும் தனிமை என்னை வாட்டிக் கொண்டே இருந்தது. புரியாத மொழி பேசும் தேசம், முகத்துக்கெதிரே சந்தித்தால் கூட புன்னகைக்கத் தயங்கும் மக்களென எல்லாமே வித்தியாசமாக உணர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளைதான் மொழியும் எழுத்தும் என் கூடவே வந்தது.

வலைப்பூக்கள் ஆரம்பித்தேன். குழுமங்களில் இணைந்தேன். அவையிரண்டும் சேர்ந்து என் தனிமையை,வெறுமையை 'இனிப் போதும்..போ' என விரட்டி, திரும்பும் பக்கமெல்லாம் அன்பானவர்களைத் தேடித் தந்திருக்கிறது. எல்லோருடனும் கை கோர்க்கச் செய்திருக்கிறது. எனக்கு ஏதாவதொன்றென்றால் தங்கள் சொந்தப் பிள்ளைக்கொன்று போலப் பதறித் துடித்து அழும் அன்பான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் மற்றும் அன்பான தோழர்,தோழிகளைப் பெற்றிருக்கிறேன். எனது உருவம், வயது, மதம், தேசம் எதையுமே ஒருவரும் பார்க்கவில்லை. தங்கள் குழந்தையைப் பத்திரமாகக் கூட வைத்துக் கொள்வது போல போகுமிடமெல்லாம் அனைவரும் அன்பாகக் கூட வருகிறார்கள். கூட்டிப் போகிறார்கள். இறைவனுக்கு நன்றி. எல்லோரையும் என்னுடன் இணைத்துவைத்த தமிழுக்கு நன்றி. எப்பொழுதும் என் கூடவே வரும் அன்பான உறவுகளுக்கு நன்றி !

இப்பொழுது மீண்டும் பிறந்திருக்கிறேன். இனி என்றும் ஏதேனும் துயர் வாட்டாமல் உங்கள் அனைவரினதும் அன்பும், பிரார்த்தனைகளும், ஆசிர்வாதங்களும், வாழ்த்துக்களும் என்னைச் சூழவும் அரணாய்க் காக்கும். நீங்கள் சொல்வது போல எனது இப்பிறப்பு உங்கள் அனைவருக்குமாகத்தான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஆதரவான மடலுக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி ஐயா !

உங்களினதும், அனைவரினதும் நலம் நாடும் பிரார்த்தனைகளோடு,

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

Unknown said...

அன்பின் அகமது சுபைர்,

//ரிஷு..

உனக்கு நேர்ந்த இந்த வலி, உன்னைத் தொடர்புகொள்ள நேர்ந்த பகீரதப் பிரயத்தனங்கள் பொய்யாய் போனது என பல இன்னல்கள் இன்னும் என்னை விட்டுப் பிரியாதிருக்கிறது.

கடவுளுக்கு நன்றி..//

ம்ம்..பல யோசனைகளுக்கு இட்டுச் சென்றிருக்கும். :(

இறைவனுக்கு நன்றி.

வருகைக்கும் கருத்துக்கும் உங்களுக்கும் நன்றி நண்பா !

Unknown said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அனுபவித்த வலிகளை அத்தனை வரிகளும் உணர்த்துகின்றன.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் கோபிநாத்,

//ம்ம்..;(//

இனி அழவைக்க மாட்டேன். நீங்கள் சிரிக்கலாம் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் உமாஷக்தி,

//Get Well soon Rishu...//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !

Unknown said...

அன்பின் வெயிலான்,

//வலியை வார்த்தையில் வடித்திருக்கும் விதத்தில் எங்களுக்கும்.......//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

அன்புடன் புகாரி said...

ரிஷான்,

ஒரு கவிஞர் எழுதிய கட்டுரையை வாசிப்பது மிகவும் சுவையானது.

//சவத் துணி உடுத்து, சவப்பெட்டிக்குள் படுத்து, சூழப் பல இதயங்களை விம்மச் செய்தபடி கல்லறைக்கு நகரும் ஊர்வலம் இப்பொழுது எனக்கு வாய்க்கவில்லை. வாழ்தலுக்கான உத்வேகத்தைத் தரும்படியான எந்தவொரு நிகழ்வும் சமீபத்தில் நடக்கவில்லைதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்நாட்டு வெயிலைப்போல தனிமை துரத்தியதுதான். சில துரோகங்களைத் தாங்கச் சக்தியற்றதான மனம் பல நாட்களாக உணவு மறுத்து, புன்னகை மறுத்து, உறக்கம் மறுத்து அழுதுவழிந்து தவித்துக் கிடந்ததுதான். அதற்காக மரணம் ஒரு விமோசனமா? //

அழகிய வரிகள்

//அழுது சிவந்த அம்மாவின் கண்கள் கண்ணாடித் தொட்டியில் பேணி வளர்க்கப்படும் செம்மஞ்சள் தங்கமீன்களை ஒத்தவையாயிருந்தன.//

அருமை அருமை

Unknown said...

அன்பின் நண்பர் புகாரி,

உங்கள் கருத்துக்கள் என்னை மகிழ்வித்தது.
நன்றி நண்பரே !!!

திரு said...

//மனம் கனக்கச் செய்யும் அனுபவங்கள்முகம் முழுதும் மகிழ்வோடு அருகினில் ஓடி வந்து கன்னத்தில் இலேசாகத் தட்டி முழுதும் விழிக்கும்படி செய்தாள். பகலா, இரவா எனத் தெரியாதபடி விழித்தேன். எங்கிருக்கிறேன் எனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு என்ன ஆனதெனப் புரியாமல் விழித்தேன்.//

எனது அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு நேர்ந்தவைகள்,,,
அது இறந்து எழுந்தவனின் இன்பமான வரிகள்.... மீண்டும் இந்த இறந்த சுகம் வேண்டும்

சுபா said...

அன்புள்ள ரிஷான்,

உடல் நலம் பெற்று சிறப்புப் பெற வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் அனுபவப் பகிர்தலை. எத்தனைப் பேருக்கு இவ்வகை அனுபவம் கிட்டும்? துயரமு அதிர்ச்சியும் கலந்த ஒரு அனுபவம் தான். ஆனாலும் அதனைக் கடந்து பார்க்கும் போது .. புது வாழ்க்கை.. (பிறவி..??) ஒன்று கிட்டிய அனுபவம் தானே இதுவும்.

அன்புடன்
சுபா

Unknown said...

அன்பின் திரு,//முகம் முழுதும் மகிழ்வோடு அருகினில் ஓடி வந்து கன்னத்தில் இலேசாகத் தட்டி முழுதும் விழிக்கும்படி செய்தாள். பகலா, இரவா எனத் தெரியாதபடி விழித்தேன். எங்கிருக்கிறேன் எனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு என்ன ஆனதெனப் புரியாமல் விழித்தேன்.

எனது அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு நேர்ந்தவைகள்,,,
அது இறந்து எழுந்தவனின் இன்பமான வரிகள்.... மீண்டும் இந்த இறந்த சுகம் வேண்டும் //


அக்கணத்தில், அந்த வலிகளிலிருந்து மீண்டுவர வேண்டுமென்ற உத்வேகமும், முடியுமா என்ற பதற்றமும் ஒரு சேரத் தோன்றி மறையுமல்லவா?

கருத்துக்கு நன்றி நண்பரே !!

Unknown said...

அன்பின் சகோதரி சுபா,

இனிய வணக்க்ங்கள்.
நிச்சயம் தொடர்கிறேன்.
ஊக்கத்துக்கு நன்றி சகோதரி !

Unknown said...

இருப்புக்கு மீள்தல் - 04 இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/04.html

Unknown said...

இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.html

Unknown said...

இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...

http://mrishansharif.blogspot.com/2009/06/05.html