Saturday, August 1, 2009

பேரழகியும், அரபுநாட்டுப் பாதணிகளும் !


 
      எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த பெண் சடாரெனக் கீழ விழுந்ததுல எனக்குச் சரியான அதிர்ச்சியாகிப் போச்சுது. சொந்த ஊரிலெண்டால் ஓடிப்போய் உதவியிருக்கலாம். என்ரை மனசு ஒரு கணம் பதறிப் போச்சுது. இப்பொழுது என்ன செய்றதென்டு தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தன். என்ரை கண்ணுல ஆருமே தட்டுப்படேல்ல. ஒரு ஈ,காக்கை கூடக் காணக் கிடைக்கேல்ல..
   
    அரபு நாட்டுச் சூடான பகல் வேளையது. கடும் வெக்கை.காத்துக் கூட கடும் சூடாத்தான் வீசும். அவசரத் தேவையில்லாம ஆரும் வெளிய இறங்கமாட்டினம். வெயில் ஆரையும் வெளியில் இறங்கவிடாது. பன்னிரண்டு மணிக்கு அத்தனை அலுவலகங்களும் பகலுணவு இடைவேளைக்காக மூடப்பட்டதெண்டால் மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் மீண்டும் திறக்கப்படும். நான் கடும் பசியிலிருந்தன். சூட்டையும்,வெக்கையையும் பொருட்படுத்தாமல் மதிய உணவுக்காகப் போய்க் கொண்டிருந்தன். அப்பதான் என் முன்னால போன அவ விழுந்தவ.
   
    அது ரெண்டு வங்கிகளுக்கு இடைப்பட்ட சிறிய ஒழுங்கை. வருகிறவங்கள் வங்கியின்  பின்புறத்தில வாகனங்கள நிறுத்துறதுக்காகக் கட்டப்பட்டிருக்குற இடத்துல வாகனங்களை நிறுத்திவிட்டு வருவினம். கீழே விழுந்து அரபு மொழியில் முனகிக் கொண்டிருந்தவளுக்கு இருபது வயதுக்குள்ள தானிருக்கும். நல்ல வடிவாக இருந்தவள் ஈரான் இல்லாட்டி லெபனான் தேசத்தவளாக இருக்கவேணும். அவங்களது உடுப்புக்கள்தான் இந்த நாட்டில இப்படி அரையும் குறையுமாக இருக்கும்.

     ஒரு கூலித் தொழிலாளியாக இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்திருக்கிற நான் ஏற்கெனவே லேசாக் கருப்புத்தான் எண்டாலும் பாலைவன வெயில் என்னை இன்னும் கருப்பாக்கிட்டுது. ஏற்கெனவே தன்ட அழகினால் பெருந்திமிர் பிடிச்சவள் போலக் காணப்பட்டவள் எழுந்து கொள்ளச் சிரமப்பட்டு இயலாதவளாக என்னை நோக்கிக் கை நீட்டியதில எனக்குப் பெரும் சங்கடமாப் போச்சுது.

    ஒரு பெண் அதிலும் வடிவான பெண் என்னை நோக்கிக் கை நீட்டியதுல சங்கடமாப் போச்சுதெண்டாலும் அந்த இடத்துல அவளுக்கு உதவுறதுக்கு ஆருமில்லையெண்ட காரணத்தினால அவளைக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டன். அவளின்ர கைகள் கடும் மென்மையாக இருந்ததில எனக்கு ஒரு மாதிரியாகிப் போச்சுது .இதுவரையில எந்தப்பெண்ணினதும் கைகளைத் தொட்டிராத என்ரை கைகள் காய்ச்சுப்போய்க் கரடுதட்டி இருந்திச்சுது. தங்கச்சிகள் ரெண்டு பேரும் வயசுக்கு வந்த பின்னால அவங்களது கைகளைக் கூடத் தொட்டதில்ல. ஊரில கல்லுடைக்கப் போற அவங்களிண்ட கைகளும் கூடக் காய்ச்சுப்போய்த்தான் இருக்கும்.

    நல்ல வாசனையோடு இருந்தவள் ஜீன்ஸும்,சட்டையும்,அரை அடிக்கும் சற்றுக் குறைவான அடி உசந்த செருப்புக்களும்  போட்டிருந்தவ. எனக்கு அந்தச் செருப்புக்கள் கனக்க ஆச்சரியத்தைத் தந்தன. என்ரை அம்மாவோ, தங்கச்சிகளோ இது போன்ற அடி உசந்த செருப்புக்களை அணிந்த பெண்களைப் பார்த்திருக்க மாட்டாங்கள். அவங்களெண்டு மட்டுமில்ல. கூலி வேலைகளுக்காக மட்டுமே வீட்ட விட்டு வெளியே கிளம்புற என்ரை ஊர்ப் பெண்களெவரும் கூடப் பார்த்திருக்க மாட்டாங்கள்.

    நான் இந்த நாட்டுக்கு வந்த கொஞ்சநாட்களுக்குள்ளேயே இது போல அடி உசந்த செருப்புக்கள் போடுற பெண்பிள்ளைகள் கனக்கப்பேரைப் பார்த்தாச்சுது. ஆனாலும் அதுக்கான வியப்பு மட்டும் என்னை விட்டும் இன்னும் விலகேல்ல. மாபிள்கள் பதிக்கப்பட்ட தரையில புது லாடமடிச்ச குதிரை போற சத்தமிருக்கேல்லே ? அதே மாதிரியான சத்தத்தோட சிலர் நடக்கேக்க பார்க்க வினோதமாயிருக்குமெனக்கு. என்ரை சிறு அறையில அந்த மாதிரி உசந்த செருப்புக்களைப் போட்டுக் கொண்டு நடப்பதாக நினைச்சிக் கொண்டு கால் முன்விரல்களால மட்டும் நடந்து பார்த்து நொந்திருக்கிறன். என்னைப் பொறுத்தவரையில அந்த மாதிரியான செருப்புக்களைப் போடுறவங்கள் கடும் திறமை வாய்க்கப்பெற்றவங்கள்.

    எனக்கு நினைவு தெரிஞ்ச காலந்தொட்டு என்ரை அம்மா என்றைக்குமே சாதாரண ரப்பர் செருப்புக் கூடப் போட்டதை நான் கண்டதில்ல. அவரின்ற அடிக்கால்கள் ரெண்டும் பித்தவெடிப்பாலும், கல்குவாரியில் நிறைஞ்சிருக்கும் சில்லுக் கல்லு இருக்கேல்ல?அது குத்தியும் காய்த்துத் தடித்துப் போய்க் கிடக்கும். அதில எந்த உணர்ச்சிகளும் தெரிவதில்லை எண்டுகூடச் சொல்லுவா அம்மா.

    தங்கச்சிகள் ஸ்கூலுக்குப் போட்டுப் போறதுக்கெண்டும் கூலி வேலைக்குப் போகேக்க போட்டுக் கொண்டு போறதுக்கெண்டும் ரெண்டு சோடி றப்பர் செருப்புக்கள் வேற வேற கலர்கள் ல வச்சுக் கொண்டிருக்கினம். ஸ்கூலுக்குப் போட்டுப் போகும் செருப்புக்கள் மட்டும் தான் ஒரே நிறத்தில ஒரே அளவோடு இருக்கும். அதையும் வீட்டுக்கு வந்ததுமே கழுவி மூலையில் பத்திரமா வச்சிடுவினம் . மற்றைய சோடி எப்பொழுதோ ஸ்கூலுக்குப் போட்டுச் சென்று வார் அறுந்ததாகவோ, இல்லையெண்டால் நன்றாகத் தேய்ஞ்சுபோனதாகவோதான் இருக்கும்.

    நான் கூட அப்படித்தான். என்ரை ஆறு வயசில முதன்முதலா என்ரை அப்பா என்னை ஊர் ஸ்கூலுக்குச் சேர்க்கப் போகேக்க தான் கால்ல றப்பர் செருப்புப் போட்டன். அந்த ஊரில பதினோராம் வகுப்பு முடியுமட்டுக்கும் செருப்பு மட்டும் தான். மேல படிக்குறதுக்காக பக்கத்துப் பெரிய ஊருக்குப் போகச் சொல்லி எல்லோரும் சொல்லேக்க எனக்கு செருப்புப் போட்டுக் கொண்டு அங்கேயெல்லாம் படிக்கப் போகப் பெரும் தயக்கமாயிருந்துச்சுது. அப்ப என்ரை ஊர் ஸ்கூல் அதிபர் தான் நான் பதினோராம் வகுப்புச் சோதினையில நல்லாப் பாசாகி ஊர்ப்பாடசாலைக்கு நல்லபெயர் வாங்கித் தந்தனெண்டு சொல்லி ஒரு சோடிச் சப்பாத்துக்களைப் பரிசளிச்சவர்.

    அண்டைக்கு எனக்கு சப்பாத்துப் போட்டுக்கொண்டு வானத்துல நடக்குறது போலத் தாங்கொணாத களிப்பு. அந்தச் சோடியை  வீட்டுக்குக் கொண்டுவந்த நாள் என்ரை தங்கச்சிகளும் ஆசையோடு அதைப் போட்டுப்பார்த்தவள்கள். இந்த மாத சம்பளத்தில அவையள் ரெண்டு பேருக்கும் நல்ல செருப்பு இரண்டு சோடி வாங்கி வைக்கவேண்டுமென நினைச்சுக் கொண்டன்.

    அந்த உசந்த செருப்புத் தடுக்கியதிலதான் இவள் விழுந்திருக்கவேணும். எழுந்து நிண்டுகொள்ளச் சிரமப்பட்டவள், ஒரு அடிபட்ட பாம்பினைப் போல 'ஸ்ஸ்ஸ்' எண்டு முனகினாள். ஒரு அடி எடுத்துவைச்சவள் மேலும் நடக்க முடியாமல் அவளாகவே பக்கத்திலிருந்த என்ரை  தோளினைப் பிடிச்சுக்கொண்டாள். பின்னர் அரபு மொழியில் அவள் சொன்னதெதுவும் எனக்குப் புரியேல்ல.

    நான் புரியேல்லை என்டது போலச் சாடை செய்தன். பிறகு அவள் ஆங்கிலத்தில் கூறியதை வைச்சும் தூரத்து நிழலில நிறுத்தியிருந்த சிவப்பு நிறக்காரினைக் காட்டியதைக் கொண்டும் அவளிண்ட கார் வரையில நடந்து போக என்னை உதவும் படி கூறுகிறாள் என்றதப் புரிஞ்சுகொண்டனான்.

    'தயக்கமில்லாமல் வெளிநாட்டுக்குப் போ ராசா..நீ எங்கேயோ போயிடுவாய் ' என்டு விசா வந்த அண்டைக்கு அம்மாவுடன் ஊர் ஜோஸியக்காரரைப் பார்க்கப் போன போது ஜோஸியக்காரர் சொன்னது சம்பந்தமேயில்லாமல் இப்பொழுது என்ரை நினைவில வந்துச்சுது.

அவள் என்னை விடவும் உயரமானவளாக இருந்ததுல என்ரை தோளைப் பற்றியிருந்தாள். அவளது மற்றக் கை என்ரை கைகளைப் பற்றியிருந்துச்சுது. என்ரை வாழ்வின் மிகப்பெரும் தயக்கம் என்னைச் சூழ்ந்தது போல இருந்துச்சுதெண்டாலும் அவளை நான் கார் வரைக்கும் கூட்டிப் போனன்.

    காரின் அருகினில் போய்ச் சேர்ந்ததும் அதுக்கான சாவியை விட்டுத் திறந்து சாரதி இருக்கையில மெதுவாக அமர்ந்து கொண்டவள், நான் நகர முற்பட்ட வினாடி 'மீண்டும் ஒரு உதவி' என்றாள். அவள் தன்ட கைப்பையிலிருந்து பேனையை எடுத்து என்ரை  உள்ளங்கையை நீட்டச் சொல்லி அதில நான்கு இலக்கங்களை எழுதினாள். எனக்கு இண்டைக்கு நடப்பதெல்லாம் பெரும் வியப்புக்குரியதாகவும் குழப்பமளிப்பதாகவும் இருந்துச்சுது. என்ரை வாழ்விலேயே இன்றுதான் பெரும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாளெண்டு  எண்ணிக் கொண்டன்.

    அவள் திரும்பவும் தன்னோட கைப்பையிலிருந்த வங்கியிலிருந்து காசெடுக்கும் ஏடீஎம் கார்டினை எடுத்து நீட்டினாள். நான் புரிஞ்சு  கொண்டவனாக எவ்வளவு எனச் செய்கையில கேட்டன். அவள் மீண்டும் என்ரை உள்ளங்கையினை வாங்கி 5000/= என எழுதி காசு  எடுத்துவரும்வரையில் காரில காத்திருப்பதாகச் சொன்னாள்.

    அவள் காசு எடுப்பதற்காகத்தான் அந்த ஒழுங்கையால் போயிருக்கவேணும். ஒழுங்கையின் மூலையில் வங்கிக்கு முன்னால் இரு ஏடீஎம் மெஷின்கள் இருக்குது. நான் என்ரை அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தவாறே மீண்டும் ஒழுங்கையால் ஓடினன். வங்கிகள்ல இருந்து நானிப்படிக் காசு எடுப்பது இதுதான் முதல் முறை. மெஷின்கள் கொடுத்த அறிவுருத்தல்களின் பிரகாரம் நான் என்ரை உள்ளங்கையைப் பார்த்தவாறு செயல்பட வேண்டியிருந்திச்சு. அந்த வங்கியில் ஆகக் கூடுதலாக ஒரு நாளைக்கு எடுக்கக் கூடிய தொகை 5000/= மட்டும் தான்.

    கார்டினைப் போட்டுக் காசு எடுக்குறதுவும், இவ்வளவு பெருந்தொகையை ஒரே முறையில் எண்ணிப்பார்க்குறதுவும் எனக்கு இதுதான் முதல் முறை. ஏடீஎம் மெஷின் இருந்த அறைக்குள்ளே பல தடவைகள் அக்காசுத்தாள்களை எண்ணிப்பார்த்தன். புது உலகத்தில மிதக்குற மாதிரி உணர்ந்தன். திரும்பவும் அவளின்ரை காரை நோக்கி ஓடிப்போனன்.

    அவள் உள்ளங்கை அளவேயான சின்னக் கண்ணாடியொன்றில பார்த்துத் தன் உதடுகளுக்குச் சாயமிட்டுக் கொண்டிருந்தாள். என்னிட்டயிருந்து பணத்தினை எண்ணி வாங்கியவள் கணக்கின் மீதியைக் கேட்டாள். எனக்கு அவள் கேட்பது புரிந்தும் புரியாமலுமிருந்திச்சு. மீண்டும் என்னிட்ட கார்டினைத் தந்தவள் 'பேலன்ஸ் ரிஸீட்' எனச் சொல்லி லேசாச் சிரிச்சாள். மறுக்க வழியின்றி அதனை வாங்கிக் கொண்டு மீண்டும் மெஷினுக்கு ஓடினன்.

    கடும்பசி ஒரு பக்கம் வயிற்றில தாளம் போட்டுக் கொண்டிருந்துச்சு. என்ரை மேலேயே எனக்கு ஒரு கணம் கோபம் கூட வந்துச்சுது. மறுகணம் 'எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படிப்பட்ட வடிவான பெண்ணின்ட நம்பிக்கை? ஆரென்றே அறியாத என்னிடத்தில எவ்வளவு நம்பிக்கையோட கார்டினையும் ரகசிய இலக்கங்களையும் தருகிறாள்?' எண்டு நெனச்சிக் கொண்டே பேலன்ஸ் ரிஸீட்டோடு ஓடி வந்து பார்க்க, கார் அங்கிருக்கேல்ல.

    என்னவாச்சுது இவளுக்கு? எங்கே போனவள் ?அப்படியென்ன அவசரம் அதற்குள்? எனக்கு எதுவும் புரியேல்ல.வெயிலால கடுமையா  வியர்த்து வழிஞ்சது. சில நிமிஷங்கள் அங்கு நின்று பார்த்தன். பின்னர் அவள் என்னைத் தேடி வங்கியின் முன்பக்கமாக வந்திருப்பாளோ எண்டு நெனச்சு மீண்டும் மெஷினுக்கருகில ஓடிவந்தன்.

    அங்கேயும் அவள் இல்லை. பசியும்,வெயிலும் என்ரை உடலுக்கு ஒரு உதறலைத் தந்து கொண்டிருந்துச்சுது. அவள் மீண்டும் என்னைத் தேடிவருவாள் எண்டு நம்பினன்.வெயிலிலிருந்து தப்பிக்க ஏடீஎம் மெஷினிருந்த சிறு அறைக்குள்ளேயே சில நிமிஷங்கள் காத்துக் கொண்டிருக்கேக்க முன் வீதியில அந்த வாகனம் வந்து நிண்டுச்சுது.

    அதிலிருந்து நாலு பேர் இறங்கி மெஷினிருந்த அறைக்குள் வருவதைக் கண்டு, அவங்களுக்கு இடம் கொடுத்து வெளியேற முற்பட்ட என்னை  அவங்கள் இறுகப்பிடிச்சுக் கொண்டாங்கள். தடித்து, உயர்ந்திருந்த அவங்கள் சூடான் தேசத்தவராக இருக்கவேணும். பெரிய உதடுகள் துடிக்க மிரட்டும் தொனியில் விசாரிக்க ஆரம்பித்த அவங்கள் பொலிஸ்காரர்கள். அது பொலிஸ் வாகனம்.

    அந்த ஏடீஎம் கார்ட் ரெண்டு நாட்களுக்கு முன்பு திருடு போனதொன்று எண்டும், மெஷினிருந்த அறையின் கேமராவின் மூலம் நான் மாட்டிக் கொண்டனெண்டும் , ஒரு அறபி ஷேக்குக்குச் சொந்தமானதை எப்படித் திருடினாய் எண்டும் விசாரித்ததில எனக்கு எதுவும் விளக்கிச்  சொல்ல பாஷை தெரியேல்ல.

    ஆங்கிலத்தில 'எனக்கொண்டும் தெரியாது' எண்டு மட்டும் திக்கித் திணறிச் சொல்லமுடிந்தது என்னால. என்ரை கையிரண்டையும் இறுக்கமாகப் பிடிச்சு இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில ஏற்றினாங்கள். திடீரென எனக்கு இழைக்கப்பட்ட அநீதியிண்ட பாரத்தாலயும்,கடும் பசியினாலயும் நான் கண்கள் மயங்கிச் சரியும் இறுதிநொடியில பொலிஸாரின் அடி உயர்ந்து தடித்த சப்பாத்துக்களைத்தான் கடைசியாக் கண்டன். ஜோஸியக்காரனின்ட குரலும் காதுக்குள் ஒலிச்ச மாதிரிக் கேட்டது.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி - உயிர்மை

69 comments:

ஃபஹீமாஜஹான் said...

"மாபிள்கள் பதிக்கப்பட்ட தரையில புது லாடமடிச்ச குதிரை போற சத்தமிருக்கேல்லே ? அதே மாதிரியான சத்தத்தோட சிலர் நடக்கேக்க பார்க்க வினோதமாயிருக்குமெனக்கு. என்ரை சிறு அறையில அந்த மாதிரி உசந்த செருப்புக்களைப் போட்டுக் கொண்டு நடப்பதாக நினைச்சிக் கொண்டு கால் முன்விரல்களால மட்டும் நடந்து பார்த்து நொந்திருக்கிறன்"

ம். நடந்தும் பார்த்திருப்பீர்கள் போலத்தான் இருக்கு.

நிகழ்வுகளையெல்லாம் நேரில் பார்ப்பதைப் போல இருக்கு.

வழமை போலவே கதை நன்றாக உள்ளது.

சினேகிதி said...

ரிஷான் இது உண்மையில்லைத்தானே :)

செருப்பு பற்றிய வரிகள் ஒரு படத்தை ஞாபகப்படுத்தின. படம் பார்க்கவில்லை ஆனால் எங்கோ வாசித்த விமர்சனம். நான் நினைக்கிறன் ஈழப்படமொன்றும் இதை மையமா வைத்து வந்ததெண்டு.

ரீவில பார்த்திருப்பினம் கீல்ஸ் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுறதை.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு நணபர் ரிஷானுக்கு
சிறுகதை நன்றாக இருக்கிறது. கேட்பதற்கு இனிமையாக இருக்கும் இலங்கை தமிழில் நான் படித்த முதல் சிறுகதை இது தான்.
சிறந்த எழுத்தாளருக்கான புக்கர் விருது வாங்கக்கூடிய அளவிற்கு நண்பர் ரிஷான் வர வேண்டும் என்பதே ஒரு நண்பன் என்ற முறையில் என்னுடைய ஆசையாகும். எம்முடைய ஆசையை நிறைவேற்றி வையுங்கள் நண்பா. ஆங்கிலத்திலும் சிறுகதை எழுதலாமே?

கோபிநாத் said...

சில பகுதிகள் ஈரானிய பாடத்தை ஞாபகப்படுத்தினாலும். முடிவு ;(

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'பேரழகியும், அரபுநாட்டுப் பாதணிகளும் !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st August 2009 09:51:15 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/91952

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

சதீஷ்குமார் said...

கதை அருமை நண்பரே...நான் கூட எங்கே அந்த அரபு அழகியை காதலிக்க போகிறிரோ என்று நினைத்தேன்......வழக்கம்போலவே (ஆனால் இந்த முறை சோகமாக இல்லாமல் )நன்றாக முடித்துவிட்டீர்.....

சதீஷ்குமார் said...

இனிய நண்பருக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..........

Anonymous said...

Hi

எங்களுடைய இணையத்தில் தாங்கள் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தங்களுடைய பிளோக்கினை எங்களுடைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி.

இப்படிக்கு
செய்திவலையம் குழுவினர்

ஜீவ்ஸ் said...

நல்லா இருக்கு ரிஷான்

சுபைர் said...

ரிஷான்,

இந்த கதையில் வரும் பேச்சு வழக்கினால் நான் உள்ளுக்குள் ஈர்க்கப் பெற்றேன். ஆனால் இது போன்ற பெண்களுக்கு உதவக்கூடாது என்று ஒரு மறைமுகமான அறிவுறுத்தலைத் தருகிறதோ என்ற சம்சயம்..

மற்றபடி நல்ல கதை..

அன்புடன்,
சுபைர்

மகி said...

நல்ல கதை ரிஷான்

நரேஷ் குமார் said...

எழுத்து முறை அருமை ரிஷான்...

லாஜிக் கொஞ்சம் இடிக்குது, ஏடிஎம் கார்டுக்கு கடவுச் சொல் வரை அந்தப் பொண்ணுக்கு எப்படித் தெரியும்?? போலீசார் ஆரம்பத்தில் ஓவராக சாத்தினாலும், விசாரணையில் அந்தப் பெண் யார் என்பதை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு, சேட்டுக்கு தெரிந்த பெண்ணாகத்தான் இருக்கணும்...

எப்படியோ, கதை வர்ணனை மிக அருமை

நடராஜன் said...

நல்ல கதை. கதா நாயகன் சிறையில் இருந்துவெளி வந்தானா இல்லையா?

-நடராஜன் கல்பட்டு

தமிழன் வேணு said...

அடப்பாவமே! இதுக்குப் பேர் தான் ஆகாயத்திலே போகிற அடியை ஏணி வைச்சு ஏறி வாங்குறதா? :-((

நல்லா இருக்குது கதை!

-தமிழன் வேணு

துரை said...

ரிஷான் ,
மனதை அள்ளும் தமிழ்
மிகவும் ரசித்தேன்

வாழ்த்துகள் நண்பா

ராஜா said...

மிக நன்றாக உள்ளது ரிஷான் கதை ....சொல்லிய விதமும் தமிழும் அருமை .....அட நானும் இங்கனதான் இருக்கேன் எந்த அரபி பொன்னும் கீழ விழ மாட்டேன்குதே ????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது உண்மையா நடந்ததா ??

விஜி said...

நட்பின் ரிஷான்.
இவை உண்மையிலேயே நடக்கும் சம்பவங்கள் தான். ஒருத்தி தன் ஏடி எம் கார்டை தருகின்றாள் என்றவுடனேயே பொறிதட்டியது...

வசீகரிக்கும் எழுத்துக்கள் உங்களுடையவை நாளுக்கு நாள் மெருகேறிச்செல்கின்றன.

வேந்தன் அரசு said...

கதை நல்லா இருக்கு. ஆனால் முடிவு ஊகிக்க முடிந்தது

சீனா said...

அன்பின் ரிஷான்

அருமையான கதைப் - நல்ல நடை - தெளிந்த சிந்தனையில் உருவான கதை

நச்சென்ற முடிவு - ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள்

- நட்புடன் ..... சீனா

நா.கண்ணன் said...

அற்புதமான கதையாடல்! வாழ்த்துக்கள்!
ஈழத்துத்தமிழ் கொஞ்சுகிறது!

- நா.கண்ணன்

சாந்தி said...

ஈழ‌த்த‌மிழ் கொஞ்சுது...




க‌தை ந‌ல்லா வ‌டிவா சொல்லியிருக்கிய‌ள்.


அவிய‌ள்ட்ட‌ பொடிய‌ன் அடிவாங்குவாரெண்டு ஊக்கிக்க‌ முடிஞ்சுது..


ந‌ல்ல‌ க‌தை..

பூங்குழலி said...

அழகான நடையில் கதையை சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான் ..

//சூட்டையும்,வெக்கையையும் பொருட்படுத்தாமல் மதிய உணவுக்காகப் போய்க் கொண்டிருந்தன். அப்பதான் என் முன்னால போன அவ விழுந்தவ.//

இந்த வரி அழகாக போய் ஒட்டிக் கொள்கிறது.

//நல்ல வடிவாக இருந்தவள் ஈரான் இல்லாட்டி லெபனான் தேசத்தவளாக இருக்கவேணும். அவங்களது உடுப்புக்கள்தான் இந்த நாட்டில இப்படி அரையும் குறையுமாக இருக்கும்.//

ஒருவரைக் கண்டவுடன் மனதில் எழக் கூடிய என்ன ஓட்டங்களை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் .

//என்னைப் பொறுத்தவரையில அந்த மாதிரியான செருப்புக்களைப் போடுறவங்கள் கடும் திறமை வாய்க்கப்பெற்றவங்கள்.//

:)))))))))))

//அப்ப என்ரை ஊர் ஸ்கூல் அதிபர் தான் நான் பதினோராம் வகுப்புச் சோதினையில நல்லாப் பாசாகி ஊர்ப்பாடசாலைக்கு நல்லபெயர் வாங்கித் தந்தனெண்டு சொல்லி ஒரு சோடிச் சப்பாத்துக்களைப் பரிசளிச்சவர்.//

இருவரின் நிலையில் உள்ள ஏற்றத் தாழ்வை நல்ல நடையில் சொல்லியிருக்கிறீர்கள் .

//அந்த உசந்த செருப்புத் தடுக்கியதிலதான் இவள் விழுந்திருக்கவேணும். எழுந்து நிண்டுகொள்ளச் சிரமப்பட்டவள், ஒரு அடிபட்ட பாம்பினைப் போல 'ஸ்ஸ்ஸ்' எண்டு முனகினாள்.//

இந்த உவமை கொஞ்சம் குறும்பாக ..

//அவள் உள்ளங்கை அளவேயான சின்னக் கண்ணாடியொன்றில பார்த்துத் தன் உதடுகளுக்குச் சாயமிட்டுக் கொண்டிருந்தாள். //

அவளின் நிலையை இந்த வரிகள் இந்த இடத்தில் அழுந்தச் சொல்கின்றன .

//அங்கேயும் அவள் இல்லை. பசியும்,வெயிலும் என்ரை உடலுக்கு ஒரு உதறலைத் தந்து கொண்டிருந்துச்சுது.//


அவள் போன பிறகே பசி மீண்டும் நினைவுக்கு வருகிறது

//திடீரென எனக்கு இழைக்கப்பட்ட அநீதியிண்ட பாரத்தாலயும்,கடும் பசியினாலயும் நான் கண்கள் மயங்கிச் சரியும் இறுதிநொடியில பொலிஸாரின் அடி உயர்ந்து தடித்த சப்பாத்துக்களைத்தான் கடைசியாக் கண்டன். ஜோஸியக்காரனின்ட குரலும் காதுக்குள் ஒலிச்ச மாதிரிக் கேட்டது.//

காலணியில் ஆரம்பித்து காலணியில் முடியும் கதை . ரொம்பவே ரசித்துப் படித்தேன்

கீதா சாம்பசிவம் said...

முடிவை முன்னேயே தெரியும்படி அமைத்திருப்பது ஒன்றே குறை, மற்றபடி நல்ல கதை.

நடராஜன் said...

அன்பர் ரிஷான் அவர்கள் எழுதிய கதை ஒரு உண்மை நிகழ்ச்சியாக இருக்குமமென்பதில் எள்ளளவும் சந்தேம் இல்லை.

துபாயில் இருக்கும் என் அண்ணன் மகன் ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம்.

ஒரு நாள் தனது பாஸ்போர்ட் விசா காகிதங்களில் எதோ பதிவு செய்து கொள்வதற்காக சம்பந்தப் பட்ட அலுவாகத்திற்குச் சென்றிருக்கிறான். பொகும் வழியில் வங்கிக்குச் சென்று ஏழாயிரம் திராம் தன் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறான்.


அலுவலகத்தில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது ஒருவன் வந்து ஏதோ அரபு மொழியில் சொல்ல கதவுகள் எல்லாம் அடைக்கப் பட்டன.
அருகில் இருந்தவரை அண்ணன் மகன் கேட்க அவர் சொன்னார். 'ஒரு ஷேக்கின் எழாயிரம் திராம் களவுபோய் விட்டது. போலீஸ் வந்த உடன் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள்" என்று.

அண்ண்ன் மகனுக்கு வேர்த்து விறு விறுத்தது. அவன் பர்சில் உள்ளது 7000 திராம். அவன் வேண்டிக் கொள்ளாத தெய்வம் இல்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் முதல் அறிவிப்பு தந்த அதே ஆள் வந்து எதோ சொன்னார். பக்கத்தில் இருந்தவர் சொன்னார், "ஷேக்கின் பணம் அவர் அங்கிக் குள்ளேயே இருந்து கிடைத்து விட்டது" என்று. அடைத்த கதவுகளும் திறக்கப் பட்டன.

மொழி புரியாத நாட்டில் நம்மவர் தங்கம் தேடி படும் வேதனைகளை நினைத்தால் மனதுக்குக் வருத்தமாகத் தான் இருக்கிறது.

-நடராஜன் கலபட்டு

thirumaalan shiva said...

தோழர் ரிஷான் அவர்களுக்கு,
மனிதநேயத்தோடு உதவி செய்யபோகும் ஒருவன் எதிர்கொள்கிற பிரச்சனைகளையும், சமூக விரோதிகள் நல்லவர்களை பயன்படுத்திகொள்கிற கசப்பான விஷயத்தையும் அழகாய் சொல்லியிருக்கிறிர்கள், அதேபோல குதிகால் உயர்ந்த செருப்புகளை அணியும் சிலரை பார்க்கும்போதெல்லாம் என்மனதிலும் இது போன்ற சிந்தனைகள் எழுவதுண்டு!

M.Stalin Felix said...

Miga Arumai tholare.....

விஷ்ணு said...

அருமையான கதை நண்பரே ...

அரபு நாடுகளில் இப்படி பல நிகழ்வுகள் ..
உங்கள் எழுத்து நடை படிக்க இனிமையாக இருந்தது ...

-விஷ்ணு ...

Shower Star said...

கதை மிகவும் அழகாக இருந்தது ,
சிங்கள தமிழை இது தான் முதல் முறையாக படிகின்றேன் மிகவும் அழகாக உள்ளது .
இது போன்ற நிறைய கதைகள் படிக்கச் ஆசை .

+Ve Anthony Muthu said...

அருமையாக எழுதுகிறீர்கள் சகோதரரே..!

மகாபிரபு said...

இந்த சம்பவத்தின் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், அரபு நாடுகளில் பணிபுரியும் நம்மவர்கள் யாரும் உதவிசெய்யறேன் என்று யாருக்கும் இரக்கம் காட்டலாகாது. இப்படி சொல்வது தவறுதான். ஆனால் நடந்த சம்பவத்தை பார்த்தால் கொஞ்சம் பயமா தான் இருக்கு... அதான் சொன்னேன்.

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
இப்ப எல்லாம் தீர விசாரித்தாலும் அதுவும் கடைசியில் தப்பா தான் போயிடுது

நல்ல பதிவை தந்து விழிப்பை ஏற்படுத்திய நண்பருக்கு நன்றி

கா.ரமேஷ் said...

என்ன கொடுமை... எத்தனை பணக்கார நாடாக இருந்தாலும் அங்கேயும் திருடிப்பிழைக்கும் கூட்டம்... விழிப்புடன் இருக்க வேண்டிய செய்தியை சொல்லும் கட்டுரை,.... பகிர்தலுக்கு நன்றி..

பாரதி said...

கொஞ்சும் தமிழில் பாடம் புகட்டும் கதை!
தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

பொதுவாகவே வளைகுடா நாடுகளில் பணிபுரிவோர் மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டியதிருக்கும்.

இருப்பினும் உதவி செய்ய எண்ணி இக்கட்டில் மாட்டும் போதுதான் இனி யாருக்குமே உதவி செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றும். இல்லையா ரிஷான்..?

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//"மாபிள்கள் பதிக்கப்பட்ட தரையில புது லாடமடிச்ச குதிரை போற சத்தமிருக்கேல்லே ? அதே மாதிரியான சத்தத்தோட சிலர் நடக்கேக்க பார்க்க வினோதமாயிருக்குமெனக்கு. என்ரை சிறு அறையில அந்த மாதிரி உசந்த செருப்புக்களைப் போட்டுக் கொண்டு நடப்பதாக நினைச்சிக் கொண்டு கால் முன்விரல்களால மட்டும் நடந்து பார்த்து நொந்திருக்கிறன்"

ம். நடந்தும் பார்த்திருப்பீர்கள் போலத்தான் இருக்கு.//

:)
நடந்து பார்த்ததில்லை. நடந்து பார்ப்பதாக நினைத்துப் பார்த்தால் கூட விழுந்துவிடுவேன் போலத்தான் இருக்கிறது. எப்படித்தான் நடக்கிறார்களோ என்ற வியப்பை எப்பொழுதும் என்னில் ஏற்படுத்தி நடந்துசெல்கிறார்கள் குதிகால் செருப்புப் பெண்கள்.

//நிகழ்வுகளையெல்லாம் நேரில் பார்ப்பதைப் போல இருக்கு.

வழமை போலவே கதை நன்றாக உள்ளது. //

உங்கள் பாராட்டு கிடைத்தில் பெரிதும் மகிழ்கிறேன்.

வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சினேகிதி,

//ரிஷான் இது உண்மையில்லைத்தானே :) //

உண்மைச் சம்பவம்தான். :(

//செருப்பு பற்றிய வரிகள் ஒரு படத்தை ஞாபகப்படுத்தின. படம் பார்க்கவில்லை ஆனால் எங்கோ வாசித்த விமர்சனம். நான் நினைக்கிறன் ஈழப்படமொன்றும் இதை மையமா வைத்து வந்ததெண்டு.//

செருப்பை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களும், கதைகளும் வந்திருக்கின்றனதான். நம்முடன் எங்கும் எப்பொழுதும் கூடவே வரும் அதனை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள மறந்துவிடுகின்றோம். இவ்வாறான திரைப்படங்களும், கதைகளுமே திரும்ப நினைவூட்டுகின்றன.

//ரீவில பார்த்திருப்பினம் கீல்ஸ் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுறதை.//

ஆமாம். நடனம் மட்டுமல்ல..மலைகளிலும் ஏறுகிறார்கள்..சறுக்காமல் !
ஆச்சரியப்படுத்துகிறார்கள்.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி !

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு நணபர் ரிஷானுக்கு
சிறுகதை நன்றாக இருக்கிறது. கேட்பதற்கு இனிமையாக இருக்கும் இலங்கை தமிழில் நான் படித்த முதல் சிறுகதை இது தான்.
சிறந்த எழுத்தாளருக்கான புக்கர் விருது வாங்கக்கூடிய அளவிற்கு நண்பர் ரிஷான் வர வேண்டும் என்பதே ஒரு நண்பன் என்ற முறையில் என்னுடைய ஆசையாகும். எம்முடைய ஆசையை நிறைவேற்றி வையுங்கள் நண்பா. //

இதற்குப் பெயர்தான் பேராசை நண்பா :)

//ஆங்கிலத்திலும் சிறுகதை எழுதலாமே?//

ஏதோ பொழுதுபோகாமல் கிறுக்கி, தமிழை இந்தப்பாடு படுத்துகிறேன். ஆங்கிலமாவது பிழைத்துப் போகட்டுமே? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் கோபிநாத்,

//சில பகுதிகள் ஈரானிய பாடத்தை ஞாபகப்படுத்தினாலும். முடிவு ;(//

உங்கள் தொடர்வருகையும் பின்னூட்டங்களும் என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்துகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சண்டியர்,

//கதை அருமை நண்பரே...நான் கூட எங்கே அந்த அரபு அழகியை காதலிக்க போகிறிரோ என்று நினைத்தேன்......வழக்கம்போலவே (ஆனால் இந்த முறை சோகமாக இல்லாமல் )நன்றாக முடித்துவிட்டீர்.....//

உங்கள் முதல்வருகைக்கும் கருத்தும் பெரிதும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

//நல்லா இருக்கு ரிஷான்//


நன்றி நண்பர் ஜீவ்ஸ் !!

M.Rishan Shareef said...

// ரிஷான்,

இந்த கதையில் வரும் பேச்சு வழக்கினால் நான் உள்ளுக்குள் ஈர்க்கப் பெற்றேன். ஆனால் இது போன்ற பெண்களுக்கு உதவக்கூடாது என்று ஒரு மறைமுகமான அறிவுறுத்தலைத் தருகிறதோ என்ற சம்சயம்..//

மற்றபடி நல்ல கதை..


நன்றி சுபைர்.
உதவலாம். ஆனால் தூக்கிவிடுவதோடு நிறுத்திக் கொள்ளலாம் :)
ஏனென்றால், இது இங்கு எனக்குத் தெரிந்த ஒருவருக்கு உண்மையில் நிக்ழந்தது.

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் மஹி !!

M.Rishan Shareef said...

//எழுத்து முறை அருமை ரிஷான்...


லாஜிக் கொஞ்சம் இடிக்குது, ஏடிஎம் கார்டுக்கு கடவுச் சொல் வரை அந்தப் பொண்ணுக்கு எப்படித் தெரியும்?? போலீசார் ஆரம்பத்தில் ஓவராக சாத்தினாலும், விசாரணையில் அந்தப் பெண் யார் என்பதை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு, சேட்டுக்கு தெரிந்த பெண்ணாகத்தான் இருக்கணும்...//


போலிஸார் எவ்வளவு அடித்தாலும், மொழி தெரியாதவனுக்கு முதலில் தன் விளக்கம் சொல்லத் தெரியாதுதானே.. இதன் பிறகு நடப்பவற்றை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடுவோம்.


// எப்படியோ, கதை வர்ணனை மிக அருமை//



நன்றி நரேஷ் !! :)

M.Rishan Shareef said...

//நல்ல கதை. கதா நாயகன் சிறையில் இருந்துவெளி வந்தானா இல்லையா?//


நன்றி நண்பரே...அதை வாசகரின் கவனத்துக்கே விட்டுவிடுவோம் :)

M.Rishan Shareef said...

// அடப்பாவமே! இதுக்குப் பேர் தான் ஆகாயத்திலே போகிற அடியை ஏணி வைச்சு ஏறி வாங்குறதா? :-((//

அருமையான சொல்லாடல் வேணு !!


//நல்லா இருக்குது கதை! //

நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் துரை,

//ரிஷான் ,
மனதை அள்ளும் தமிழ்
மிகவும் ரசித்தேன்

வாழ்த்துகள் நண்பா //


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !!!

M.Rishan Shareef said...

//மிக நன்றாக உள்ளது ரிஷான் கதை ....சொல்லிய விதமும் தமிழும் அருமை .....அட நானும் இங்கனதான் இருக்கேன் எந்த அரபி பொன்னும் கீழ விழ மாட்டேன்குதே ????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது உண்மையா நடந்ததா ??//


நன்றி ராஜா..
அடடா..யாரும் விழாமலே இருக்கட்டும். :)
ஒருவருக்கு நடந்தது.. அவரைச் சிறையிலடைத்துப் பிறகு நாட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் :(

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//நட்பின் ரிஷான்.
இவை உண்மையிலேயே நடக்கும் சம்பவங்கள் தான். ஒருத்தி தன் ஏடி எம் கார்டை தருகின்றாள் என்றவுடனேயே பொறிதட்டியது...

வசீகரிக்கும் எழுத்துக்கள் உங்களுடையவை நாளுக்கு நாள் மெருகேறிச்செல்கின்றன. //


உங்கள் வரிகள் என்னை ஊக்குவிக்கிறது..நன்றி தோழி !!!

M.Rishan Shareef said...

//கதை நல்லா இருக்கு. ஆனால் முடிவு ஊகிக்க முடிந்தது //


நன்றி நண்பர் வேந்தன் அரசு !!!

M.Rishan Shareef said...

அன்பின் சீனா ஐயா,

//அன்பின் ரிஷான்


அருமையான கதைப் - நல்ல நடை - தெளிந்த சிந்தனையில் உருவான கதை

நச்சென்ற முடிவு - ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா//


தொடரும் உங்கள் ஊக்குவிப்புக்கும், அன்பான நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நா.கண்ணன் ஐயா,

//அற்புதமான கதையாடல்! வாழ்த்துக்கள்!
ஈழத்துத்தமிழ் கொஞ்சுகிறது!//


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,



//ஈழ‌த்த‌மிழ் கொஞ்சுது...




க‌தை ந‌ல்லா வ‌டிவா சொல்லியிருக்கிய‌ள்.


அவிய‌ள்ட்ட‌ பொடிய‌ன் அடிவாங்குவாரெண்டு ஊக்கிக்க‌ முடிஞ்சுது..


ந‌ல்ல‌ க‌தை..//


ஆஹா..வடிவாக் கருத்துச் சொல்லியிருக்கிறியள். எங்கட தமிழும் தெரியுமென்ன? :))

நன்றி அக்கா !!

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

இச் சிறுகதை குறித்த உங்கள் விரிவான கருத்து பெரும் மகிழ்வைத் தருகிறது.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !!!

M.Rishan Shareef said...

அன்பின் கீதா சாம்பசிவம்,

//முடிவை முன்னேயே தெரியும்படி அமைத்திருப்பது ஒன்றே குறை, மற்றபடி நல்ல கதை.//


நன்றி சகோதரி !!

M.Rishan Shareef said...

அன்பின் நடராஜன்,

நீங்கள் சொல்லியிருப்பது மிகச் சரி.

இங்கு நடக்கும் கைதுகளில் அனேகமானவை தவறான புரிதல்களில் செய்யப்படுபவை. அதற்குக் காரணம், சந்தேகமும், மொழியறியாத் திண்டாட்டமும்தான்.

இங்கு, கைதாகித் துன்பப்படும் ஒவ்வொருவரிடமும் இப்படிப் பல கதைகள் இருக்கக் கூடும்.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் திருமாளன் சிவா,

//தோழர் ரிஷான் அவர்களுக்கு,
மனிதநேயத்தோடு உதவி செய்யபோகும் ஒருவன் எதிர்கொள்கிற பிரச்சனைகளையும், சமூக விரோதிகள் நல்லவர்களை பயன்படுத்திகொள்கிற கசப்பான விஷயத்தையும் அழகாய் சொல்லியிருக்கிறிர்கள், அதேபோல குதிகால் உயர்ந்த செருப்புகளை அணியும் சிலரை பார்க்கும்போதெல்லாம் என்மனதிலும் இது போன்ற சிந்தனைகள் எழுவதுண்டு!//


உங்கள் கருத்து பெரிதும் மகிழ்வைத்தருகிறது. நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஸ்டாலின்,

//Miga Arumai tholare.....//


நன்றி நண்பரே !!!

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

//அருமையான கதை நண்பரே ...

அரபு நாடுகளில் இப்படி பல நிகழ்வுகள் ..
உங்கள் எழுத்து நடை படிக்க இனிமையாக இருந்தது ...//


ஆமாம்.இப்படிப் பல நிகழ்வுகள்..சிலது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

//கதை மிகவும் அழகாக இருந்தது ,
சிங்கள தமிழை இது தான் முதல் முறையாக படிகின்றேன் மிகவும் அழகாக உள்ளது .
இது போன்ற நிறைய கதைகள் படிக்கச் ஆசை .//

அன்பின் நண்பருக்கு,

நன்றி நண்பரே !

இதே தமிழில் எனது வேறு கதைகள்,

அப்பாச்சி http://mrishansharif.blogspot.com/2008/10/blog-post.html
என் ஜன்னலின் சினேகிதி http://mrishansharif.blogspot.com/2008/07/blog-post_15.html
பாலா என்றழைக்கப்பட்ட சதீஷ் http://mrishansharif.blogspot.com/2008/03/blog-post.html

M.Rishan Shareef said...

அன்பின் அந்தோணி முத்து,

எனது சிறுகதைப்பக்கத்துக்கான உங்கள் முதல் வருகை பெரிதும் மகிழ்வினைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

//அருமையாக எழுதுகிறீர்கள் சகோதரரே..!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

மஞ்சுபாஷிணி said...

உண்மை உண்மை.. உதவி செய்யப்போய் கடைசியில் அவன் வாழ்க்கையே சிறைக்குப்பின் ஆகிவிட்டதே.. பாவம் அந்த பையன்....அருமையான கதை ரிஷன் ஷரீப்..

சிவா.ஜி said...

நானிருந்த ஒரு வளைகுடா நாட்டில்...பெண்களால் இப்படி பலர் ஏமாற்றப்பட்டதைக் கண்டிருக்கிறேன்.

நல்ல படிப்பினைதரும் கதையென்றாலும், பாவம் கதையின் நாயகனின் நிலையை நினைத்து ஒரு கணம் வேதனையாக இருக்கிறது.

வாழ்த்துகள் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் மஞ்சுபாஷிணி,

//உண்மை உண்மை.. உதவி செய்யப்போய் கடைசியில் அவன் வாழ்க்கையே சிறைக்குப்பின் ஆகிவிட்டதே.. பாவம் அந்த பையன்....அருமையான கதை ரிஷன் ஷரீப்.//

கருத்துக்கு நன்றி சகோதரி. ஒவ்வொரு சிறைக்குப் பின்னாலும் இப்படிப் பல கதைகள் இருக்கக் கூடும்.

M.Rishan Shareef said...

அன்பின் சிவா.ஜி,

//நானிருந்த ஒரு வளைகுடா நாட்டில்...பெண்களால் இப்படி பலர் ஏமாற்றப்பட்டதைக் கண்டிருக்கிறேன்.//

அழகு இருக்கும் இடங்களில் ஆபத்தும் இருக்கிறது என்பதனைப் போலத்தான் :(

//நல்ல படிப்பினைதரும் கதையென்றாலும், பாவம் கதையின் நாயகனின் நிலையை நினைத்து ஒரு கணம் வேதனையாக இருக்கிறது.

வாழ்த்துகள் ரிஷான்.//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

த.ஜார்ஜ் said...

அன்பு ரிசான்.
கீழே விழுந்த ஒருத்தியை தூக்கி விடப்போன ஒரு நிகழ்ச்சியாக தொடங்கி,அவள் செருப்பிலிருந்து எழுந்த நினைவுகளாகி,முடிவில் திடுக்கிடும் அந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. தெளிந்த நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது முதலை கவ்வியது மாதிரி...
அழகான தமிழில் அம்சமாய் வடித்திருக்கிறீர்கள். மிக நல்லது. பாராட்டுக்கள்.

இளசு said...

அன்பு ரிஷான்..

அழகு கொஞ்சும் தமிழுக்கு முதல் பாராட்டுகள்..
அம்மா, தங்கைகள், பள்ளிக்காலம் - மிகத் துல்லியமாக பதிவு செய்தீர்கள்..

ஜார்ஜ் சொன்னதுபோல் முதலை கவ்விய முடிவு.. பதறிவிட்டேன்..

படிப்பினை பொதித்த சுவைக்கதை!

பாராட்டுகள் ரிஷான்..

உயிர்மையில் வெளியானதற்கு, வாழ்த்துகள்!

மன்மதன் said...

வடிவாக எழுதப்பட்ட சிறுகதை..

ஃபைனல் டச்சிங் அருமை..

இது கதையல்ல..பாடம்..!!

வானதி தேவி said...

நன்றாக கதை களத்தை தேர்வு செய்து செப்பனிட்டு கருத்து விதை விதைத்து
அறுவடை மட்டும் எளிதாக விட்டு விட்டீர்கள்.ஆம் பலன் முழுதும் வாசகர்களுக்கே
வாழ்த்துக்கள் தோழரே,,,,

M.Rishan Shareef said...

அன்பின் த.ஜார்ஜ்,இளசு,மன்மதன்,வானதி தேவி,

இச் சிறுகதை குறித்த உங்கள் வரிகளொவ்வொன்றும் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றன.

நன்றி அன்பு நண்பர்களே !

Marshad Mansoor said...

நல்லா இருக்கு.....வாழ்த்துக்கள்

எஸ் சக்திவேல் said...

ரிஷான், உங்கள் புத்தகங்களை எங்கு வாங்களாம்? (கடையில் என்று கடி ஜோக் போடாதீர்கள்)